2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வெந்நீர் துளி பனிமூட்டமாக மாறிய அதிசயம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாத்திரமொன்றில் இருந்து ஊற்றப்படும் நீரானது நிலத்தில் சிந்துவதுதான் வழமையான நிகழ்வு. ஆனால், நபரொருவர் ஜன்னல் வழியாக ஊற்றிய வெந்நீரானாது புகையாக மாறி பனிமூட்டம் போல் செல்லும் அதிசயமொன்று சைபிரியாவில் இடம்பெற்றுள்ளது.

இக்காட்சிகள் அடங்கிய வீடியோவானது இணையத்தளத்தில் வெளியாகி பலரை கவர்ந்துள்ளது.

சைபிரிய பிரஜை ஒருவர் 41 மைனஸ் டிகரி செல்சியஸ் பாகை கால நிலையில் வெந்நீரை கொதிக்க வைத்து அதனை ஜன்னல் வழியாக ஊற்றியுற்றுள்ளார். இந்நீரானது நிலத்தில் சிந்தாமல் பனிமூட்டாமாக மாறியுள்ளது.

சைபிரியாவின் நொவொசிபிரிஸ்க் பகுயிதியில் உள்ள குடியிருப்புத் தொகுயில் வசித்து வந்த நபரே இக்காட்சியை தனது கையடக்கத்தொலைபேசி கமராவில் வீடியோவாக பதிவுசெய்துள்ளார்.

இந் நாட்டின் கிழக்கு பிராந்தியங்களில் மைனஸ் 50 டிகரி செல்சியஸ் பாகையில் வெப்பநிலை காணப்படுகின்றது. இதேபோல் மத்திய பகுதியில் மைனஸ் 20 பாகையில் வெப்பநிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .