2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நாய்க்கு அயல் வீட்டாரின் பெயரை வைத்ததால் வந்த வினை

Kogilavani   / 2012 டிசெம்பர் 19 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர் தான் வளர்த்து வந்த நாய்க்கு அயல்வீட்டாரின்  பெயரை வைத்தக் குற்றத்திற்காக 500 ஸ்ரேலிங் பவுனை இழப்பீட்டுத்தொகையாக செலுத்த வேண்டிய விபரீத நிலையை எதிர்கொண்ட  சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

ஹூ லின் என்பவரே இத்தகைய விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளார். இவர் தனது வீட்டின் அருகில் வசித்து வருபவரான வெங் சன் என்பவரின் பெயரை தனது செல்லப்பிராணிக்கு வைத்துள்ளார்.

தாம் குடியிருந்த கட்டிடத்தை விரிவாக்கம் செய்தமை  காரணமாக மேற்படி இருவரும் ஆறுவருடங்களுக்கு முன்னர்  மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் மேற்படி நபரின் பெயரை தனது செல்லப்பிராணிக்கு வைத்து அழைத்துள்ளார்.

குறித்த நபர் வெளியில் செல்லும்போதெல்லம் இப்பெண் தனது செல்லப்பிராணியை சத்தமாக அழைத்துள்ளார்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த மேற்படி நபர் குறித்த பெண்மீது வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

'அவர் தனது நாய்க்கு வெங் என்ற எனது பெயரை வைத்துள்ளார். பின் என்னை காணும் போதெல்லாம் அந்த நாயை அழைத்து என்னை அவமதித்தார்' என வெங் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

வெங்கை அவமதித்த குற்றத்திற்காக ஹூ 500 ஸ்ரேலிங் பவுனை இழப்பீட்டுத்தொiகாயக செலுத்த வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .