2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சுய இன்பத்திற்கு பிரத்தியேக பார்: பெண்களுக்கு மட்டும்

Kogilavani   / 2012 டிசெம்பர் 06 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுமைப்படைப்பதில் ஜப்பான் நாட்டினரின் திறமையை குறைத்து மதிப்பிடமுடியாது. அந்தவகையில் அந்த விடயத்திற்கும் பிரத்தியேகமான பார் ஒன்றை உருவாக்கியுள்ளனர். பெண்களுக்காகவே இந்த பிரத்தியேக பாரை ஜப்பான் நாட்டினர்  உருவாக்கியுள்ளனர்.

சுய இன்பத்தை அனுபவிக்க விரும்பும் பெண்களுக்கு மட்டுமே இந்த பிரத்தியேக பார் ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் 'லவ் ஜோல்' என்ற பெயரில் இத்தகைய பார் உருவாக்கப்பட்டுள்ளது.

காதல் மற்றும் பாலியலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த லவ் ஜோலானது  பெண்களுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த பாருக்குள் பாலியல் பொம்மைகளினால் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் நாட்டு செய்தியாளர் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார்.

'பாரின் சுவர்களில் வைப்ரேட்டர்கள் உள்ளிட்ட பல பொருட்கன் இணைக்கப்பட்டிருக்கின்றன.  இவற்றை பார்க்கும் போது பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுகின்றது' என  லவ் ஜோலின் உரிமையாளர் மேகுமி நககவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுய இன்பப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான விவாதங்களும் இங்கு நடைபெறுகின்றன. பெண்கள் அனைவரும் ஒரே இடத்தில் குழுவாக அமரந்து சுய இன்பப் பழக்கம் குறித்து விவாதிக்க முடியும். அதேபோல் தமது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம்.

இந்த பாரில் காணப்படும் நாகரீகமான மற்றும் கவர்ச்சிமிக்க இடங்களானது பெண்கள் உரையாற்றுவதற்கு பொருத்தமான இடங்களாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .