2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நிர்வாண நடமாட்டத்துக்கு எதிரான புதிய சட்டத்தை எதிர்த்து ஆடைகளைந்த ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


நிர்வாண நடமாட்டத்திற்கு தடைவிதிக்கும் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆடைகளைந்த ஆர்ப்பாட்டம் ஒன்று அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா, சான் பிரான்சிகோ நகரிலுள்ள நீதிமன்றத்திலே இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கேஸ்ட்ரோ மாவட்டத்தில் உள்ள சான் பிரான்சிகோ நகரிற்கு வரும் சுற்றுப் பயணிகள் மற்றும், உள்ளூர் வாசிகள் இப்பகுதியில் நிர்வாணமாக நடமாடுவதை வழக்கமாகக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்நடமாட்டத்திற்கு தடைவிதிக்கும் தீர்மானத்தை கேஸ்ட்ரோ மாவட்டம்; கொண்டு வந்துள்ளது.

இத்தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு பிரான்சிஸ்கோ மேயர் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது, நிர்வாணமாய் திரிவதை எதிர்த்து 7 பேரும் ஆதரித்து 4 பேரும் வாக்களித்தனர்.

எதிர்வரும் பெபர்வரி மாத்திலிருந்து இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, இப்புதிய சட்டத்தை மீறி செயற்படுபவர்கள் அபராதம் செலுத்தவேண்டுமெனவும் அதே குற்றத்தை மீண்டும் புரிபவர்கள் சிறைதண்டனையை எதிர்நோக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டது.

இதனை கேள்வியுற்ற பலர் ஆத்திரமுற்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அவர்களில் சிலர், திடீரென்று தங்கள் ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக நின்று புதிய சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பினர்.

இவ்வாறு ஆடைகளைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண் பெண்களை போர்வையில் போர்த்தி அழைத்துச்செல்லும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .