2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மனைவி மரணம்: விமான நிறுவனங்களுக்கு எதிராக கணவன் வழக்கு

Kogilavani   / 2012 நவம்பர் 27 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடல் பருமன் அதிகமென்பதால் விமான பயணம் இரத்து செய்யப்பட்ட அமெரிக்க பெண்ணொருவர் தாய் நாட்டிற்கு செல்லமுடியாமல் ஹங்கேரியில் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேற்படி பெண்ணின் கணவர் குறித்த விமான நிறுவனங்களுக்கு எதிராக நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த வில்மா சோல்டெஸ் என்ற 56 வயது பெண்ணொருவரே இவ்வாறு மரணமாகியுள்ளார். இவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க திரும்ப வேண்டுமென்றிருந்த நிலையில் இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பெண் 425 இறாத்தல் உடற்பருமன் கொண்டவராகவும் ஒரு காலை இழந்த நிலையில் சக்கர நாற்காலியில் பயணிப்பவராகவும் காணப்பட்டுள்ளார்.

சிறுநீரக கோளாறு மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அமெரிக்காவில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு மாத விடுமுறை எடுத்துகொண்டு தனது கணவருடன் ஹங்கேரிக்கு இவர் பயணமாகியுள்ளார்.

இந்த ஜோடி தமது மருத்துவ சிகிச்சைக்காக நாடு திரும்ப முயன்றபோது உடற்பருமனை காரணம் காட்டி 3 விமான நிறுவனங்கள்  இவர்களது பயணத்தை பிற்போட்டுள்ளன.

'அவர்கள் விமான இருக்கையில் அமரவேண்டாம் என கூறுவதற்கு முன்பே எனது மனைவி விமான இருக்கையில் இருந்துவிட்டார்' என அப் பெண்ணின் கணவன் சோல்டெஸ் தெரிவித்துள்ளார்.

விமானத்தை விட்டு இறங்கிய பின் மேற்படி ஜோடி பல மணிநேரங்களை விமான நிலையத்தில் செலவிட்டுள்ளது. பின்னர் பெருகிவில் உள்ள டெல்டா விமானம் தமக்கு பொறுத்தமாக அமையும் என்று கருதிய மேற்படி ஜோடி பெருகிவிற்கு சென்றுள்ளது.

ஆனால், விமானத்திலுள்ள பிளாஸ்திக்கினாலான சக்கர நாற்காலியானது அவரது பருமனை தாங்காது என்று பெருகு விமான நிலைய பயணிகள் தெரிவித்துள்ளதுடன் லிப்டில் கூட அவரை ஏற்றவில்லை.

ஹங்கேரியுள் உள்ள மருத்துவர்கள் தமக்கு பழக்கமானவர்கள் இல்லை என்பதால் தமது மருத்துவத்துக்காக  மேற்படி ஜோடி மருத்துவர்களை பார்க்கவில்லை. இந்நிலையில் இரண்டு நாட்களின் பின் மேற்படி பெண் மரணமாகியுள்ளார். அத்துடன் அவரது உடலும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

தம்மை அலட்சியம் செய்ததற்காகவும் தனது மனைவியின் இறப்புக்கு காரணமாகிய குற்றத்திற்காகவும் குறித்த விமான நிறுவனங்களுக்கு எதிராக சோல்டெஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .