2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இரத்த செங்கல் தயாரிக்கும் கட்டிடக்கலை நிபுணர்

Kogilavani   / 2012 நவம்பர் 06 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


மணல், மண் மற்றும் கற்களை பயன்படுத்தியே வீடுகள் கட்டப்படுகின்ற நிலையில் இரத்தத்தில் செங்கல் தயாரிக்கும் பணியில் பிரிட்டனைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

அந்த கட்டிடக்கலை நிபுணர் விலங்குகளின் இரத்தத்துடன் மணலை கலந்தே செங்கற்களை தயாரிக்கும் செயற்பாட்டில்  ஈடுபட்டு வருகிறார்.

லண்டனைச் சேர்ந்த ஜேக் மன்றோ என்ற 26 வயதுடைய நபரே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டவருகின்றார். நோடிங்கம் பல்கலைக்கழகத்தில் முதுமானி கற்கை நெறியை தொடரும் இவர், தனது இறுதிவருட செயற்திட்டமாக இதனை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 12 மாதங்களாக இச்செயற்திட்டத்தினை முன்னெடுத்துவரும் மன்றோ, இறைச்சிக்காக விலங்குகளை வெட்டும் தொழிற்கூடங்களில் இருந்து ரத்தத்தை ஒட்டுமொத்தமாக வாங்கி அதனுடன் மணலை கலந்து செங்கல் போன்று தயாரித்து, அவற்றை மின் அடுப்பில் 70 டிகிரி வெப்பநிலையில் சுமார் ஒருமணிநேரம் வேகவைத்து பதப்படுத்துகிறார். 

செங்கல் ஒன்றை தயாரிப்பதற்கு அவர் 35 லீட்டர் இரத்தத்தை செலவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

'உள்நாட்டில் கிடைக்கக்கூடிய கொங்ரீட் மற்றும் இரும்புகளைக் கொண்டு ஒற்றை மாடிக்கட்டிடங்கள் உருவாக்கப்படுகின்றன. நான் உப்புபடிகங்களை கொண்டு உருவாக்ககூடிய ஒரு திண்மத்தை இணையத்தளத்தில் தேடினேன். ஆனால், இரத்தம் மட்டுமே அதற்கு பொருத்தமானதாக அமைந்தது.

ஆப்ரிகாவில்  கட்டப்படும் கட்டிடங்கள் நீடித்து நிலைக்கும் வகையில் இரத்தம் சேர்க்கப்படுகின்றது. வரலாற்று ரீதியாக பார்க்கும் போது, இரத்தமானது செயற்கை பொருட்கள் வருவதற்கு முன்பதாக பசையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 'நீர் உட்புக முடியாத அளவு இச் செங்கலானது மிகவும் இறுக்கமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இரும்பு கம்பிகளுக்கு பதிலாக இந்த செங்கலை பயன்படுத்த முடியும். இவ்வாறு தயாரிக்கப்படும் செங்கற்களைக்கொண்டு எகிப்தில் ஒருமுன்மாதிரியான கட்டிடமொன்றை நிர்மாணப்பதற்கு தீர்மானித்துள்ளேன்.

ஆனால், இத்தகைய செங்கற்களைக் கொண்டு கட்டப்படும் வீடுகளில் மக்கள் வசிக்கவிரும்புவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்' என ஜேக் மன்றோ தெரிவித்துள்ளார்.

எனினும், வளர்ச்சியடையாத நாடுகளில் மண், கற்களுக்கு பதிலாக் ரத்த செற்கற்களை பயன்படுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .