2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஜப்பானியருக்கு கன்னித்தன்மையை விற்பதற்கு முன்வந்த பெண் நெருக்கடியில்

Kogilavani   / 2012 நவம்பர் 01 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற நல்லலெண்ண சேவைக்காக தனது கன்னித்தன்மையை 101,299,000 இலங்கை ரூபாவிற்கு ஜப்பானியருக்கு விற்பதற்கு முன்வந்த பெண் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.

பிரேசிலைச் சேர்ந்த கட்ரினா என்ற 20 வயது பெண்ணொருவர் தனது கன்னித்தன்மையை விற்று அதனூடாக வரும் பணத்தை வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு பயன்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் இணையத்தளமொன்றில் ஏலத் தொகையொன்றையும் அறிவித்திருந்தார். இதற்கு பலர் போட்டியிட்ட போதும் ஜப்பானியர் ஒருவருக்கே மேற்படி பெண்ணின் அனுமதி கிடைத்தது.

இந்நிலையில் குறித்த ஜப்பானியரும் அப்பெண்ணும் நாட்டில் அமுலிலுள்ள விபசார சட்டங்களை தவிர்த்துக்கொள்வதற்காக விமானத்தில் உறவுக்கொள்வதற்கு ஒப்புக்கொண்டிருந்தனர்.

இதனை கேள்வியுற்ற பிரேசிலைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் இது விபசார நடவடிக்கையென்று கூறி இவ்விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்விடயமானது ஆள்கடத்தல் மோசடி குற்றம் போல தோன்றுகிறது என குறித்த வழக்குரைஞர் வெளிநாட்டு அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இருவரினதும் செயற்பாட்டை ஆவணப்படமாக எடுக்கப்போவதாக கூறியிருந்த அவுஸ்திரேலிய இயக்குநரும் கைது செய்யப்படவேண்டுமென வழக்குரைஞர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் கட்ரினாவின் விசாவானது விபசார குற்றத்திற்காக ரத்து செய்யப்பட்டு அவர் பிரேசிலுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டுமென் வழக்குரைஞர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • ikmsm Thursday, 01 November 2012 12:24 PM

    நவீன முறை விபச்சாரம் இது. கெட்டுப்போக இப்போ புதுப்புது முறைகளைகலயெல்லம் கண்டுபுடிச்சிருக்காங்க. எப்படியோ பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும் என்பது இதுதான்.

    Reply : 0       0

    ramda Thursday, 01 November 2012 12:29 PM

    33:35. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். அல் குர்ஆன்
    http://www.tamililquran.com

    Reply : 0       0

    Riyaz Saturday, 03 November 2012 05:21 AM

    என்றும் நலமுடன் வாழ்க

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .