2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தாய்பாலில் போதை பொருளை கலந்துகொடுத்த பெண் நெருக்கடியில்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 28 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பாலில் போதைப்பொருள் கலந்துகொடுத்தார் என தாயொருவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்தைச் சேர்ந்த கெதரின் ஓன் என்ற 29 வயதுடைய பெண்ணொருவரே இத்தகைய குற்றத்தை எதிர்கொண்டுள்ளார்.

தனது துனைவருக்கும் தெரிந்த நிலையில், 18 வாரங்களுக்கும் குறைந்த நிலையில் உடைய தனது மகள் பிரெய்னிக்கு தாயப்பாலில் போதைப் பொருளை கலந்து கொடுத்தார் என்ற குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் இப்பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய வழக்கை நியூசிலாந்து நீதிமன்றம் முதல் தடவையாக எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

நியூஸிலாந்தின் வான்கானுயில் அமைந்துள்ள   மேற்படி பெண்ணின் வீட்டை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை செய்ததுடன் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அப்பெண்ணின் துனைவரையும் கைது செய்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட மேற்படி பெண், ஆறு மாத காலம் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் என்று வான்கானுய் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'வீட்டு வன்முறை' யின் கீழ் மேற்படி பெண்ணின் வீடு கண்காணிக்கப்படுகின்றது. அக்குழந்தை மற்றும் அதனது தாயிற்கு உதவிகள் தேவைப்படுவதால் மேற்படி பெண்,  அதிகாரிகளின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளாரென சார்ஜன்ட் அன்டிரிவ் மெக்டோனல்ட் தெரிவித்துள்ளார்.

ஒருவர் போதை மருந்துக்கு அடிமையாகும்போது அவரும் பாதிக்கப்படுகிறார் அவரைச் சுற்றியுள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையே  இந்த வழக்கு எடுத்துக்காட்டுகின்றது.  இந்த தாய்க்கும் பிள்ளைக்கும் உதவி தேவைப்படுகிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .