2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிறுநீர் வாளிக்குள் தலையை கவிழ்த்து வேலையை இழந்த பொலிஸார்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


பந்தயத்தில் வெல்வதற்காக சிறுநீர் நிரப்பபட்ட வாளிக்குள் தலையை கவிழ்த்திருந்த பொலிஸார் ஒருவர் வேலையை இழந்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மென்டர் பகுதியைசேர்ந்த பொலிஸ் அதிகாரியான பில் குரோச்சர் என்பவரே இத்தகைய விபரீதநிலையை எதிர்கொண்டுள்ளார்.

மேற்படி நபர் 450 டொலர்களை பந்தயத்தொகையாக பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

5கலன் கொள்ளளவு உடைய சிறுநீர் நிரப்பப்பட்டவாளியில் இந்நபர் தலையை கவிழத்தவாறு இருந்துள்ளார். பந்தயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாட்டைஅவரது நண்பர்கள் வீடீயோ காட்சியாக பதிவுசெய்துள்ளனர்.

நிலுவையில் இருந்த மருத்துவ விடுமுறையை எடுத்துக்கொண்டே குரோச்சர் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தின் தலைமயதிகாரி டேனியல் லிவெலன் தெரிவித்துள்ளார்.

குரோச்சர் தனிச் சிறப்புமிக்க அதிகாரி என மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார். இத்தகைய அசாதாரண தீர்ப்பின் காரணமாக கிரவ்ச்சர் ஏமாற்றமடைந்துள்ளார். அவர் சிறப்பான தீர்வொன்றுகிடைக்குமென எதிர்பார்த்திருந்தாரென அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .