2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தாய்ப்பால் வகுப்பிற்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஆண் மிட்வைப்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 07 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவ்வாறு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது என்பது தொடர்பான கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 'தாய்ப்பால்' வகுப்பிற்கு சென்ற ஆண் மிட்வைப் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

கிரிஸ் பட் என்ற 30 வயது நபருக்கே இவ்வாறு தாய்ப்பால் வகுப்பிற்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

போர்ன்மவுத் பல்கலைக்கழத்தில் மிட்வைப் கற்கை நெறியொன்றை தொடர்ந்தும் வரும் மேற்படி நபர் தாய்ப்பால் வழங்குவது தொடர்பிலான அறிவினை பெற்றுக்கொள்வதற்காக தேசிய குழந்தை பிறப்பு நிதியத்திற்கு  சென்றுள்ளார்.

இதன்போது இவருக்கு தாய்ப்பால் பயிற்சி தொடர்பிலான அறிவை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குவதற்கு  மறுப்புக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேற்படி தாய்ப்பால் கற்கை நிலையத்தில் பயிற்சிகளை பெற்றுவரும் பெண்கள் இவ்வாறு ஆண் கற்கையாளர்கள் முன்னிலையில் தோன்றுவதற்கு தயக்கம் காண்பிப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து மேற்படி நபர் இப் பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தாய்மார்கள் அவர்களது துணைவர்களுடன் பங்குப்பற்றும் திறந்த வகுப்பிற்கு அவர் வரவேற்கப்படுகிறார் என தேசிய குழந்தை பிறப்பு நிதியம் தெரிவித்துள்ளது.

'தாய்பால் வகுப்பில் உள்ளவர்களிடமிருந்து ஒரு நிமிடத்தில் நான் தூக்கியெறிப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை' என பட் தெரிவித்துள்ளார்.

'அவர் பெண்கள் அமர்விலே கலந்துகொள்ள விரும்புகிறார். அங்கு அறைகள் தனியாக இல்லை என்பதால் பெண்கள் ஆண்களுக்கு முன் தோன்றுவதில் சங்கடத்தை உணர்கின்றனர்' என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

'பிறப்பிற்கு முந்திய தாய்ப்பால் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதற்கான சந்தரப்பம் அவருக்கு வழங்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சில பெண்கள் ஆண்களுக்கு முன் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை விரும்புவதில்லை என்பதை பட் உணர்ந்துக்கொண்டுள்ளதாக தாய்ப்பால் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .