2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஆபாசப்படத்தினால் சர்ச்கைக்குள்ளான பல்கலைக்கழகம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகழ்பெற்ற பல்கலைக்கழகமொன்றின் நூலகத்தில் எடுக்கப்பட்ட ஆபாசப் படத்தினால் அப்பல்கலைக்கழகம் பாரிய சர்ச்சையை எதிர்நோக்கியுள்ள சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

43 நிமிடங்களைக் கொண்ட மேற்படி ஆபாசப் படமானது பகல்வேளையில் எடுக்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கான நூலகத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டுமென மாணவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக அறிவிப்பு பலகையில் மேற்படி திரைப்படம் குறித்து அறிவிக்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ் ஆபாசப்படத்தினை பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் படத்தில் தோன்றியுள்ள நடிகை யார் என்பதை கண்டறியும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் இறங்கியுள்ளனர்.

இதேவேளை, இப் படத்தில் தோன்றிய நடிகை நிச்சயமாக பல்கலைக்கழக மாணவியாக இருக்கமாட்டாரென கருதப்படுகிறது.

'இது மிகவும் மோசமானது' என மேற்படி பல்கலைக்கழத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .