2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பாலியல் சாதனங்களை திருடியதால் நெருக்கடிக்குள்ளான பெண்கள்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 04 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் சாதான விற்பனை நிலையமொன்றில் சுமார் 1,400 ஸ்ரேலிங் பவுன் பெறுமதியான பாலியல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள், 100 மணித்தியாலங்களுக்கு கட்டணமின்றிய சமூகப்பணியை மேற்கொள்ளும் விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இங்கிலாந்தின் ஹல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள மேற்படி நிலையத்தில் பல காலமாக தொழில்புரிந்து வந்த ஜீலி பிரெஸ்டன் என்ற 42 வயது பெண்ணும் ராசேல் கிரீன்சைட்ஸ் என்ற 27 வயது பெண்ணுமே இத்தகைய விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்காக மேற்படி கடையின் முகாமையாளர் மற்றொரு பணியாளர் மீது சந்தேகம் கொண்டுள்ளார். ஆனால், இருவாரங்களின் பின்னர் கடையில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவினூடாக அவதானித்தபோது மேற்படி பெண்கள் பாலியல் பொம்மைகளை திருடும் காட்சிகள் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கிரீன்சைட்ஸ் என்ற பெண், வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொண்ட பொருட்களுக்கான கட்டணங்களை அறவிடுவதும், பின்னர் அதனை ரத்து செய்வதும் அந்த பணத்தை தனது சட்டைப்பைக்குள் மறைத்துக்கொண்டு மற்ற பெண்ணுடன் வெளியேறுவதுமான காட்சிகள் குறித்த கமராவில் பதியப்பட்டுள்ளது.

பிரெஸ்டன் என்ற பெண் சுமார் 1,000 ஸ்ரேலிங் பவுன் பெறுமதியான பாலியல் சாதனங்களையும் பணத்தையும் திருடியுள்ளதுடன் கிரீன்ஸைட்ஸ் சுமார் 420 ஸ்ரேலிங் பவுன் பெறுமதியான சாதனங்களை திருடியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

'இப்பெண்கள் இருவரும் பல வருடங்களாக மேற்படி நிலையத்தில் தொழில்புரிந்து வருகின்றனர். மற்றொரு ஊழியர் இந் நிலையத்தில் ஆடை காணாமல் போகின்றது என்ற விடயத்தை மேலாளருக்கு கூற முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருந்துள்ளார்கள்' என வழக்கறிஞர் ஹெதர் லெவிட் தெரிவித்துள்ளார்.

மேற்படி இரண்டு பெண்களும் 12 மாதங்களில், 100 மணித்தியாலங்களுக்கு கட்டணங்கள் இன்றி சமூக பணியை மேற்கொள்ளுமாறும் ஒவ்வொருவரும் தலா 85 ஸ்ரேலிங் பவுன்களை நீதிமன்ற செலவீடுகளுக்கு வழங்குமாறும் நீதிபதி பணித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • JAN Saturday, 06 October 2012 10:37 AM

    "(அல்லாஹ்வை) ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்." அல் குர்ஆன் 24:21.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .