2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அந்தரங்க உறுப்பை உணவாக சமைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறிய இளைஞன்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 20 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய இளைஞர் ஒருவர், துண்டிக்கப்பட்ட தனது பாலுறுப்பை சமைத்து அதனை உணவகமொன்றின் வாடிக்கையாளருக்கு பறிமாறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

மயோ சுகியாமா என்ற 23 இளைஞனே இத்தகைய குற்றத்தை புரிந்துள்ளார். இவர் பெண்ணாக மாறுவதற்காக கடந்த மார்ச் மாதம் மருத்துவ சத்திரசிகிச்சையொன்றினூடாக தனது ஆணுறுப்பை அகற்றியுள்ளார்.

அகற்றப்பட்ட உறுப்பை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த அவர், அண்மையில் அதை சமைத்து உணவகத்தின் வாடிக்கையாளர்களுக்கு  பரிமாறியுள்ளார்.

மேற்படி உணவுக்காக ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் 160 ஸ்ரேலிங் பவுன்களை அறவிட்டுள்ளதுடன் காளானுடன் கலந்து மேற்படி உணவை  பரிமாறியுள்ளார்.

சுகியாமா மற்றும் மூவருக்கு எதிரான குற்றப்பத்திரங்கள் டோக்கியோ மாவட்ட அரச வழக்குத்தொடுநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டோக்கியோ நகர பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜப்பானில் நரமாமிசம் தொடர்பாக சட்டவிதிகளும் இல்லை என்பதால், தனது அந்தரங்க உறுப்பை சமைத்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்ற குற்றங்களுக்காக தன்னை  கைது செய்ய முடியாது என சுகியாமா கூறியுள்ளார்.

சுகியாமா, மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் அவருக்கு எதிராக 2.5 மில்லியன் யென் அபராதம் அறவிடப்படுவதோடு இரண்டு வருட சிறைத்தண்டனையையும் எதிர்கொள்ள நேரிடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .