2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சவூதியில் பெண்களுக்கு மாத்திரமான நகரம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கு மாத்திரமான பிரத்தியேக நகரொன்றை அமைப்பதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ள கண்டிப்பாக பின்பற்றப்படும் ஷரீஆ சட்டத்திற்கிணங்க பெண்கள் தொழில்களில் ஈடுபடுவதற்கு ஏற்றவாறு இந்நகரம் அமைக்கப்படவுள்ளது.

இந்நகரை நவீனமயப்படுத்துமாறு சவூதி அரேபிய கைத்தொழில் சொத்துக்கள் அதிகார சபை கோரப்பட்டுள்ளது. இந்நகருக்கான வடிவமைப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. நிர்மாண நடவடிக்கைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளன.

நாட்டின் இஸ்லாமிய சட்டங்களை மீறாமல், பெண்கள் தொழில்புரிவதற்கான வாய்ப்பு  இந்நகரத்தில் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஹபூப் நகரசபையானது, இத்திட்டத்திற்கு 500 மில்லியன் ரியால் முதலீடு கிடைக்கும் எனவும்  புடவைக்கடைகள் மற்றும் மருந்தகம், உணவுச்சாலைகள் போன்றவற்றினூடாக சுமார் 5000 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் எனவும் எதிர்பார்க்கிறது. அங்கு பெண்களுக்கான உற்பத்தி நிறுவனங்கள் பெண்களால் நிர்வகிக்கப்படும்.

சவூதி அரேபியாவில் அமுலிலு;ளள ஷரீஆ சட்டமானது பெண்கள் தொழில்புரிவதற்கு  தடைவிதிக்கவில்லை. எனினும் சவூதியில் தொழில்புரிவோரில் 15 வீதமானோர் மாத்திரமே பெண்கள் என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 

'சவூதியில் ஏற்கெனவே உள்ள கைத்தொழில் நகரங்களில் பெண்களால் நிர்வகிக்கப்படும் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் சிறு எண்ணிக்கையான பெண் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது பெண்களுக்கான இரண்டாவது கைத்தொழில் நகரமொன்றை நாம் அமைக்கவுள்ளோம். நாட்டின் பல பாகங்களிலும்; பெண்களுக்கு மாத்திரமான தொழிற்சாலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்' என கைத்தொழில் சொத்துக்கள் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் சலேஹ் அல் ரஷீட் கூறியுள்ளார்.

சவூதி அரேபியாவில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் விமர்சித்து வருகின்றன. எனினும் அண்மைக்காலத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் பெண்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என சவூதி மன்னர் அப்துல்லா கடந்த செப்டெம்பர் மாதம் அறிவித்தார். பெண்கள் வாகனம் செலுத்துவதை தடுக்கும் ஒரே நாடாக சவூதி அரேபியா உள்ளது.

எனினும், இம்முறை லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுவிழாவின் ஜூடோ போட்டியில் வோஜ்டன் சஹேர்கனி எனும் பெண் பங்குபற்றியதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய முதலாவது சவூதி அரேபிய பெண் எனும் பெருமையை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .