2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அணி இலக்கத்தை சூரிய குளியலினூடாக உடலில் பதித்த வீரர்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கால்பந்தட்ட வீரரொருவர், கால்பந்தட்ட அணியில் தனக்குரிய இலக்கத்தை சூரிய குளியலில் ஈடுபட்டதனூடாக மார்பில் பதியவைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் துருகு பகுதியை சேர்ந்த ரபி எனும் 27 வயதான வீரரே இவ்வாறு தனது இலக்கத்தை மார்பில் பதிய வைத்துள்ளார்.

இதற்காக இவர் 15 என்ற இலக்கத்தை நெஞ்சில் பொறித்துக்கொண்டு, உடலின் ஏனைய இடங்களில் டேப்பை ஒட்டிக்கொண்டு சூரியகுளியலில் ஈடுபட்டதால் அவரது மார்பில் '15' என்ற இலக்கம் பதிந்துள்ளது.  இதற்காக ஒரு நாள் பகல் முழுதும் அவர் வெயிலில் இருந்தார்.

அது எனது கால்பந்தாட்ட அணி இலக்கமாகும். அதனால் நான் எப்போதும் அந்த இலக்கத்தை மறக்கமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பால் ரெடோ ஜங்கர் வயது 26 என்ற நபர் இதேபோன்று சூரியகுளியிலில் ஈடுபட்டதனூடாக தனது முதுகு பகுதியிலும் பின்புறத்திலும் அடையாளமொன்றை பொறித்துக்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .