2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வாகனங்களின் வேகத்தை தனிப்பதற்காக செக்ஸ் பொம்மையை பயன்படுத்தும் பெண்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது வீட்டின் முன்னால் வேமகமாக பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக காற்றடைக்கப்படும் பாலியல் பொம்மை ஒன்றை மரத்தில் கட்டி வைத்துள்ளார்.

நிங்போ கிராமத்தில் வசித்து வரும் லின் சென் எனும் 67 வயதான பெண்ணே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தனது வீட்டின் முன்னால் அதிவேகமாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளை பொலிஸார் தடுக்காதமை குறித்து அவர் ஆத்திரமுற்றிருந்தார். இதனால் வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக இவ்வாறான விபரீத திட்டத்தை அப்பெண் அமுல்படுத்தியுள்ளார்.

இவர் தனது வீட்டில் உள்ள மரமொன்றில் பெண் பாலியல் பொம்மை ஒன்றை நிறுத்தி அதற்கு சிகப்பு நிறத்திலான உள்ளாடைகளை அணிவித்துள்ளார். பார்ப்பதற்கு கவர்ச்சியாக காணப்படும் இந்த பொம்மையானது சாரதிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைந்துள்ளது.

இதனால் பொம்மையை பார்ப்பதற்காக சாரதிகள் மெதுவாக வாகனத்தை செலுத்துவர் என அவர் நம்புகிறார்.

'அவர்கள் எனது வீட்டின் அருகில் போக்குவரத்த சமிக்ஞை விளக்குகளை அமைத்துள்ளனர். இதனால் வேகமாக வரும் கார்கள் இயன்றவரை வேகமாக சமிக்ஞை விளக்குகளை கடந்து செல்ல முயற்சிக்கின்றன.  இது மிகவும் ஆபத்தானது' என சென் தெரிவித்துள்ளார்.

'பொலிஸார் இது குறித்து அக்கறை காட்டவில்லை. அதனால் நான் இப்பாலியல் பொம்மையை வாங்கி மரத்தில் கட்டினேன்.

சாரதிகள் பார்ப்பதற்கு பெறுமதிமிக்க எதையாவது காண்பித்தால் அவர்கள் வேகமாக செல்வதை தவிர்ப்பார்கள் என நான் நினைத்தேன' என அவர் மேலும் தெரிவித்தார்.

சென் மேற்கொண்ட இந்நடவடிக்கையின்பின் விபத்துகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 'விபத்துகளை குறைப்பதற்கு நாம் மேற்கொள்ளும் வழி இதுவல்ல. ஆனால் இந்த வழி பலனளிக்கவில்லை எனக் கூறமுடியாது' என பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .