2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

விமானத்தில் நீச்சலுடை நடனம் நடத்தியமைக்காக விமான நிறுவனத்திற்கு அபராதம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாம் விமானமொன்றில் அழகு ராணி போட்டியாளர்களை நீச்சலுடையில் நடனமாடச் செய்த விமான நிறுவனமொன்றின் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரமின்றி பிகினி உடையில் விமானத்தில் நடனமாடுவதற்கான அனுமதியயை வழங்கிய குற்றத்திற்காக மேற்படி விமான நிலைய அதிகாரிக்ளுக்கு  20 டோங் (சுமார் 130,000) ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமின் ஹு சி மின் சிட்டியிலிருந்து  நாஹ் டிரேங் நகருக்கு பயணித்த வியட்ஜெட்எயார் என்ற விமானத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. 5 பெண்கள் நீச்சலுடையுடன் நடனமாடுவதை பயணிகள் தமது கையடக்கத்தொலைபேசிகளில் படம்பிடித்துள்ளனர்.

நாட்டில் புகழ்பெற்ற விடுமுறை தளத்திற்கான பயணத்தில்  'விடுமுறை சூழலை' ஏற்படுத்துவதற்கு இந்நிறுவனம் விரும்பியதாக  அந்நிறுவனத்தன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வியட்ஜெட் எயாரானது அனுமதியளிக்கப்படாத காட்சியை அரங்கேற்றியதன் மூலம் உள்ளூர் விமானப் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இக்காட்சிகளை படம்பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசிகள் பாதுகாப்பான நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .