2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஒலிம்பிக் கிராமத்தில் 'கங்காரு ஆணுறைகள்' காணப்பட்டமை குறித்து விசாரணை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான போட்டியாளர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில், கங்காரு அடையாளமிடப்பட்ட ஒருதொகை ஆணுறைகள் எவ்வாறு வந்தன என்பது தொடர்பில் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சைக்கிளோட்ட வீராங்கனையான கரேலின் புசானன், தனது டுவிட்டர் இணையத்தளத்தில் இது தொடர்பிலான புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

ஒலிம்பிக் கிராமத்தில் பாலியல் நடத்தைகள் இடம்பெறுகின்றன என்ற கருத்துக்கள் உண்மை என்பதை இந்த ஆணுறைகள் உறுதிப்படுத்துகின்றன என அவர் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஒலிம்பிக் போட்டியாளர்களுக்காக 150,000 இலவச ஆணுறைகளை ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் வழங்கியுள்ளனர். ஒலிம்பிக் கிராமத்தில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்கள் மூலம் இவை விநியோகிக்கப்படுகின்றன. இவை டியூரெக்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டவையாகும்.

ஆனால் அவர்கள் அவுஸ்திரேலியாவை கருதும் ஆணுறைகள் எவ்வாறு ஒலிம்பிக் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

'நாங்கள் இவ்விடயம் தொடர்பில் ஆராய்வோம். நாம் இவற்றை போட்டியாளர்களுக்கு வழங்கவில்லை. ஏனெனில் டியூரெக்ஸ்தான் எமது பங்காளர்கள் என ரோய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு ஒலிம்பிக் அதிகாரியொருவர்  தெரிவித்துள்ளார்.

1992 ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விளையாட்டுப் போட்டியாளர்கள் சுயமாகவும் ஆணுறைகளை பயன்படுத்தப்படுவதற்கு  அனுமதிக்கப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Thursday, 09 August 2012 12:43 PM

    உண்மதான், கங்காரு ஆணுறைகள பபயன்படுத்தியது தப்புத்தான்.
    காட்டெருமை அணுறைகள் பயன் படுத்தியிருக்கனும்.

    Reply : 0       0

    lankan Friday, 10 August 2012 12:03 AM

    விபசாரம் இப்போ சாதாரணம் ஆகிடுச்சி முட்டாள் கூட்டம் கையில் உலகம்.

    Reply : 0       0

    uvais,m.s Friday, 10 August 2012 08:58 PM

    ஆக விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளுபவர்கள் பாலியல் உறவுகளில் கலந்து கொள்ளுங்கள் என்று தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது ....1992 இல் இருந்து ஒலிம்பிக்கில் விபச்சாரமும் ஒரு விளையாட்டாக அனுமதிக்க பட்டு உள்ளது?

    Reply : 0       0

    royal Tuesday, 18 September 2012 05:48 PM

    இனிமேல் கான்டம் ஊதும் போட்டியும் வைக்கலாம்.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .