2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஆண்களைப் போல் திறந்த மார்புடன் உடற்பயிற்சியில் ஈடுபடும் உரிமை கோரி போராடும் பெண்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூயோர்க்கை சேர்ந்த பெண்ணொருவர் ஆண்களை போன்று மேலாடை அணியாமல் டொப்லெஸ்ஸாக  உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கான சமத்துவ உரிமை வேண்டுமென கோரி, டொப்லஸாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிலடெல்பியா மாநிலத்தைச் சேர்ந்த நடனக் கலைஞரான மொரியா ஜோன்ஸ்டன் எனும் 29 வயதான இப்பெண், மேலாடைகளை கலைந்து விட்டு உடற்பயிற்சியில் ஈடுபடுவது சட்டபூர்வமான உரிமையென கூறியுள்ளார்.

யோகா பயிற்சி நிலையமொன்றில் அவர்  டொப்லஸாக பயிற்சியில் ஈடுபட்டதற்காக அப்பயிற்சி நிலையத்திற்கு செல்வதற்கு தடைசெய்யப்பட்டார். அதன்பின்னரே இப்போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

இவர் கடந்த மே மாதத்திலிருந்து நகரின் கிழக்கு பகுதிகளில் டொப்லஸாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். நியூயோர்க் சட்டங்களின்படி, ஆண்களைப் போன்று பெண்களுகளும் திறந்த மார்புடன்  உடற்பயிற்சியில் ஈடுபடலாம் என்பதை தான் சந்திககும் பெண்களுக்கு அவர் நினைவூட்டுகிறார்.

இது தொடர்பில் ஜோன்ஸ்டன் தெரிவிக்கையில், நியூயோர்க் பொலிஸ் திணைக்களத்தினர் உட்பட அதிகமான இந்த உரிமைகள் குறித்து அறியாதுள்ளனர்  என கூறியுள்ளார்.

அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோதிலும் இறுதியில் எவ்வித குற்றச்சாட்டுமின்றி விடுவிக்கப்பட்டார்.

'பெண்கள் தமது உரிமை என்னவென்பதை அறிந்தக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மேலாடையின்றி செல்வதற்கான தைரியத்தை நான் கொடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • arivu yasahan Saturday, 04 August 2012 01:55 PM

    பெண்கள் தமக்குரிய நற்பண்புகள் என்னவென்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.

    Reply : 0       0

    flowertree Sunday, 05 August 2012 06:56 AM

    அது பெண்களுக்குரிய பண்பு. இது பெண்ணா பேயி உடைகள் தேவை இல்லை

    Reply : 0       0

    Welcome Thursday, 09 August 2012 02:37 AM

    டொப் லெஸ் ஆக என்ன, பொட்டம் லெஸ் ஆகவும் வாருங்களேன்! யார் தடுத்தார்? நீங்கள் எல்லாம் ஹெட் லெஸ்கள் தானே. ”ஈகுவல் க்ரௌண்ட்ஸ்”

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .