2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மனைவியின் பிறப்புறுப்பில் துளையிட்டு, பூட்டிட்ட கணவன் கைது

Kogilavani   / 2012 ஜூலை 19 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மனைவி பிறருடன் பாலியல் தொடர்புகொள்ள முடியாத வகையில் மனைவியின்  பிறப்புறுப்பில் துளையிட்டு பூட்டொன்றை கொழுவிய நபரொருவரை பொலிஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்த சம்பவமொன்று இந்தியாவின் இந்தூர் நகரில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே மேற்படி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேற்படி கணவன் தனது மனைவிக்கு மதுவை அருந்தவிட்டு தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றபோதே இப்பெண் நஞ்சருந்தியுள்ளார்.

இப்பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் பெண்ணின் பிறப்புறுப்பில் பூட்டு காணப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேற்படி பெண் அருந்திய நஞ்சை வெளியேற்றுவதற்காக குழாயொன்றை வயிற்றுப்பகுதிக்குள் செலுத்துவதற்கு முயன்றபோதே வைத்தியர்கள் இதனை அவதானித்துள்ளனர்.  அதன்பின் வைத்தியர்கள்  பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

தனது கணவர் சோஹனை தான் 16 வயதாகவிருக்கும்போதே  திருமணம் செய்ததாகவும் அவர் பல வழிகளிலும் தன்னை துன்புறுத்தியதாகவும் அப் பெண் தெரிவித்துள்ளார்.

இந்தூர் முஷக்டி பகுதியில் வசித்து வந்த சோஹான் கடந்த 2008 ஆம் ஆண்டு, தான் நித்திரையில் இருந்தபோது தன்னை ஒரு அறையில் வைத்துப் பூட்டியதாகவும் தனது பிறப்புறுப்பில் கூர்மையான கருவியை கொண்டு பூட்டிட்டதாகவும் அப்பெண் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது சோஹன் தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்த முனைவதாகவும் அப்பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

அப்பெண் நஞ்சருந்தியப்பின் இது தொடர்பில் தனது சகோதரிக்கு அறிவித்துள்ளார். பின்பு சகோதரியின் மகன் குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

பொலிஸார் சோஹனை கைது செய்துள்ளதுடன் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது மேற்படி பெண்னின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மேற்படி வைத்தியசாலை அத்தியட்சகர் வி.எஸ்.பஷா தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • j.i.hasan Thursday, 02 August 2012 06:24 AM

    இந்நபரை மிகவும் கேவலமாக கருதுகின்றேன். இவ்வாறான நபர்களை சமூகத்திடம் இருந்து ஒதுக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .