2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஆரம்ப பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பாலியல் படத்தை வாபஸ்பெற உத்தரவு

Kogilavani   / 2012 ஜூலை 15 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசையினால் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பாலியல் படம் கடும் விமர்சனங்கள் காரணமாக விற்பனையிலிருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பிரித்தானிய கல்வியமைச்சர் நிக் கிம், மேற்படி தொலைக்காட்சி நிறுவனத்தின் உயரதிகாரிகளை தனது அலுவலகத்திற்கு அழைத்து, இத்திரைப்படத்தில் காணப்படும் பாலியல் காட்சிகளை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இத்திரைப்படத்தை வாபஸ் பெறுமாறு பெற்றோர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீண்டகாலமாக கோரிவந்தனர். இத்திரைப்படமானது நீல படத்தை போன்று உள்ளதென அவர்கள் விமர்சித்துள்ளனர்.

இப்படத்தில் நிர்வாணமாக வரையப்பட்டுள்ள ஆண் பெண் உருவங்களின் உடற்பாகங்களை குறித்துக்காட்டுமாறு 5 வயதான சிறார்களை கோருவதற்கான பகுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

8 வயதானவர்களுக்கு காண்பிப்பதற்கான படத்தின் பாகமொன்றில், ஜோடியொன்று படுக்கையறையில் நிர்வாணகோலத்துடன் ஒருவரை ஒருவர் துரத்திச்செல்லும் காட்சியும் பின்னர் பாலியல் உறவுகொள்ளும் காட்சியும் கார்ட்டுன் வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பில் அமைச்சர் கிப் தெரிவிக்கையில், ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய படங்களை காண்பிப்பது குறித்து அதிர்ச்சியடைவர். இப்படங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என  அவர் கூறினார்.

இப்படங்களை காண்பிப்பதற்கு முற்பட்ட சில பாடசாலை நிர்வாகங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அப்பாடசாலைகளிலிருந்து தமது பிள்ளைகளை வாபஸ் பெறப்போவதாகவும் பெற்றோர்கள் பலர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X