2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பணக்காரர்களை திருமணம் செய்வது குறித்து பாடம் நடத்தும் ஆசிரியை

Kogilavani   / 2012 ஜூலை 12 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணக்காரர்களை கவர்ந்து திருமணம் செய்து கொள்வது குறித்து சீன ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தி வருகிறார்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரை சேர்ந்தவர் சூபி என்ற ஆசிரியரே இவ்வாறு பிரத்தியேக வகுப்பு ஒன்றை மேற்கொண்டு வருகிறார்.

பணக்காரர்களை கவர்ந்து, அவர்களை திருமணம் செய்து கொள்வது தொடர்பான வகுப்பை கடந்த ஏழாண்டுகளாக சூ பி நடத்தி வருகிறார்.

இவருடைய வகுப்பில் படித்த 100,ற்கும்; அதிகமான பெண்கள் இந்த பாடத்தால் பயன் அடைந்துள்ளனர். ,தற்காக அவர் ஒரு இலட்சம் ரூபாவினை மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்.

மொத்தம் 40 வகுப்புகள் வரை நடத்தப்படுகின்றன.

இந்தப் பள்ளியில் 26 வயது முதல் 35 வயது வரை உடைய மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் பணக்காரரை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் 44 வயதான பெண்ணொருவரும் தற்போது ,ந்தப் பள்ளியில் கல்வி கற்று வருகிறார்.

வகுப்பு நடக்கும் காலத்தில் பணக்காரர்களை சந்திக்கவும் ,ந்த ஆசிரியை ஏற்பாடு செய்து கொடுக்கிறார்.

'இவ் வகுப்பில் கற்பவர்கள் பணக்கார இளைஞரை சந்திக்கும் முன் அவருடைய பழக்க வழக்கங்கள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர் அடிக்கடி எங்கு செல்கிறார் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அவர் செல்லும் இடத்துக்கு சென்று தற்செயலாக அவரை சந்தித்தது போல பாசாங்கு செய்ய வேண்டும். அவருடைய பழக்கத்தையும்  பின்பற்ற வேண்டும். எடுத்த எடுப்பில் ஆடம்பரமான உணவுக்கெல்லாம் ஆர்டர் செய்யக் கூடாது.

நீங்கள் பழகும் நபர் கொடுக்கும் அன்பளிப்புகளை வாங்கி கொள்ளலாம். முதல் இரண்டு மாதங்களுக்கு அவருடன் மிகவும் நெருங்கி பழகக்கூடாது. ஓராண்டுக்குள் அவரை திருமணம் செய்து கொள்ள அவசரப்படக்கூடாது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் உங்களை திருமணம் செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றால் நீங்கள் அவருடைய மனைவியாக முடியாது' எனறு மேற்படி ஆசிரியை தெரிவித்துள்ளார். (தட்ஸ் தமிழ்)

You May Also Like

  Comments - 0

  • jemm Thursday, 12 July 2012 12:45 PM

    திருமணம் நடக்குறது அப்புறம். ஆனால் பணக்காரர்களுக்கோ இலவச பரிசுதான்..... பாவம் இந்த மாணவிகள். மாறி மாறி போய் மாட்டுவான் ஒருவன் பின் பாதியில் முடியும்க இவங்க கல்யாண கதை. முட்டாள்கள் இருக்கும்போதுதான் முட்டாளாக்குபவர்களும் வருவாங்கோ!

    Reply : 0       0

    pavi Friday, 13 July 2012 09:04 AM

    இப்போது கேடுகெட்டுப்போக பணம் கட்டி கிளாஸ் வேறு போகவேண்டியிருக்க்கு பாருங்கோ.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .