2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கரடியிடம் அகப்பட்ட அரைநிர்வாண மனிதர்

Kogilavani   / 2012 ஜூன் 14 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

காட்டில் வசித்து வரும் வயோதிபர் ஒருவர் அரை நிர்வாண் கோலத்தில் நின்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில், தெய்வாதீனமாக காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவமொன்று சுவீடனில் இடம்பெற்றுள்ளது.

சுவீடனைச் சேர்ந்த ஒலா அகேஸன் என்ற 61 வயது வயோதிபரே இவ்விபரீதத்தை எதிர்கொண்டுள்ளார்.

'மரையொன்றை படம்பிடிப்பதற்காக நான் எனது மனைவியிடம் ஐ பாட் கருவியை எடுத்து வரும்படி அழைத்தேன். ஆனால் அவர் என் பின்னால் நின்ற கரடியை கண்டு அலரினார்' என அவ் வயோதிபர் ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

'நான் திரும்பிப் பார்த்தபோது என் பின்னால் மிகப் பெரிய கடியொன்று நின்றுக்கொண்டிருந்தது. அது அரை மீற்றர் தூரத்தில் நின்றிருக்கலாம். என்னால் அதனை நெருங்கி தொடுவதற்கு முடியும். ஆனால் அந்த தருணத்தில் அதுபற்றி சிந்திக்கவும் முடியவில்லை' என அவர் கூறியுள்ளார்.

மேற்படி வயோதிபதிபர் கீழே விழுந்தபோதிலும் அவர் எழுந்து ஓடி தனது அறைக்கு சென்றுவிட்டார்.  அக்கரடி காட்டிற்குள் சென்று மறைந்தது.

'இந்த காட்சிகள் அனைத்தும் படம்பிடிக்கப்பட்டமை குறித்து மகிழச்சியடைகின்றேன். இல்லையெனில் இச்சம்பவத்தை ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .