2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஆபாச வீடியோவில் மனைவியை கண்டு அதிர்ந்த கணவர்

Kogilavani   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதல் தடவையாக ஆபாச வீடியோவொன்றை பார்த்த  நபர் ஒருவர் அப்படத்தில் தனது மனைவியை கண்டு அதர்ச்சியடைந்த சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது.

எகிப்தின் டாக்காலியா பகுதியை சேர்ந்த ராமடான் எனும் இந்நபர் இன்டர்நெட் கபே ஒன்றில் மேற்படி காட்சியை பார்த்து அவ்விடத்திலே மயங்கி வீழ்ந்துள்ளாதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

மேற்படி நபர் சுயஉணர்வடைந்தவுடன் அவசரமாக வீடுதிரும்பி தனது மனைவியிடம் இது குறித்து கேட்டபோது அம்மனைவி முதலில் இதை மறுத்தார்.

ஆனால் அந்நபர் ஆதாரத்தை தனது மனைவியிடம் காட்டியபோது அப்பெண் திருமணத்திற்கு முந்தைய தனது காதலருடன் இணைந்து துரோகம் செய்தமையை ஒத்துக்கொண்டுள்ளார்.

தான் தனது கணவருடன் 14 வருடங்கள் திருமண வாழ்க்கையில் இணைந்து, நான்கு பிள்ளைகளை பெற்றபோதிலும் தான்
ஒருபோதும் தனது கணவரை காதலிக்கவில்லை என அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்

'11 ஆபாசப் படங்களில் எனது மனைவியும் அவரது முன்னாள் காதலரும்; ஆபாச கோலத்திலிருப்பதை நான் பார்த்தேன். நான் ஆபாச படம் பார்ப்பது இதுவே முதல் தடவை. ஆர்வம் காரணமாக இதை பார்த்தேன்' என எகிப்திய பத்திரிகைகளிடம் ரமடான் தெரிவித்துள்ளார்.

'நான் எனது மனைவியை ஆபாசப்படங்களில் பார்த்ததை அவரிடம் கூறியது போது அவர் முதலில் அதனை மறுத்ததுடன் என்னை பைத்தியம் என கூறினார். அதன்பின் நான் அவரிடம் ஆதாரத்தை காட்டினேன்.

அதன்பின் தான் இன்னும் தனது முன்னாள் காதலரை காதலிப்பதாகவும் அக்காதலர் இளமையானவர் எனவும் நான் வயதானவர் எனவும் அவர் கூறினார்' என ரமடான் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .