2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

விமான நிலைய அதிகாரிகள் முன்னால் திடீரென நிர்வாணமாக நின்ற பெண்

Kogilavani   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளின் முன்னால் பெண்ணொருவர் எந்த காரணமும் இல்லாமல் திடீரென ஆடைகளை களைந்துகொண்டு நிர்வாணமாக நின்ற சம்பவம் அமெரிக்காவின் டென்வர் நகரில் இடம்பெற்றுள்ளது.

அடையாளம் காணப்படாத மேற்படி பெண் திடீரென இவ்வாறு நடந்துகொண்டதால் விமான நிலையத்தில் உள்ளோர் குழப்பமடைந்தனர்.

இப்பெண் தன்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லையென்று நிரூபிப்பத்றகாக அல்லது பாதுகாப்பு அதிகாரிகள் ஆடைகளை களைய சொல்கின்றார்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் வழியில் மேற்படி பெண் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த நிலையில் பாதுகாப்பு பிரிவினரால் கண்டறியப்பட்டுள்ளார். அப்போது சிகரெட் புகைப்பதை நிறுத்துமாறு உத்தியோகஸ்தர்கள் அறிவுறுத்தினர்.

அதையடுத்து, குறித்த பெண் சிகரெட்டை எறிந்துவிட்டு ஆடைகளை களையத்தொடங்கினாரென விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் சிகரெட் விடயத்திற்கும் இப்பெண் ஆடைகளை களைந்ததற்கும் தொடர்பிருக்காது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 20 நிமிடங்கள் நிர்வாணமாக நின்றிருந்த மேற்படி பெண்  பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

இச்சம்பவத்திற்காக அப்பெண் எந்தவித குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ளகொள்ளாத அதேவேளை இச்சம்பவத்திற்காக அவர் மீது குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படவில்லை.

You May Also Like

  Comments - 0

  • ikmsm Thursday, 19 April 2012 12:28 AM

    அந்த நாடுகளில் நிவாணமாக நிக்காமல் இருந்திருந்தால்தான் குற்றச்சாட்டுக்களை சந்திக்க வேண்டிவரும். இந்தப் பெண் நிர்வாணமாக நின்றதனால் அதிகாரிகளினால் எந்த குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ளவில்லை . வாழ்க பலே அதிகாரிகளே ! வாழ்க அமெரிக்கா !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .