2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மார்பக அழகு சிகிச்சைக்குள்ளான பெண்களுக்காக விசேட குத்துச்சண்டை போட்டி

Kogilavani   / 2012 ஏப்ரல் 03 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்பக அழகு சத்திரசிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கான விசேட குத்துச்சண்டை போட்டியான்று  ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.

மொடல் அழகிகளான மிகேலா ஷபெர் மற்றும் இந்திரா வீஸ் ஆகிய அமெச்சூர் குத்துச்சண்டை போட்டியாளர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.

இப்போட்டிக்கான பிரச்சாரமாக தமது குத்துச்சண்டை ஆற்றலை இவ்விருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தினர். ஜேர்மன் தொலைக்காட்சியொன்றில் கடந்த சனிக்கிழமை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது.

இத்தகைய போட்டியானது ஆபத்தானது என சிலர் விமர்சித்துள்ளனர். எனினும் அதை மேற்படி தொலைக்காட்சி நிலையத்தின் நிர்வாகிகள் நிராகரித்துள்ளனர்.

கிக் பொக்ஸிங் விளையாட்டில் உலக சம்பியன் பட்டம் பெற்ற வீராங்கனையான கலாநிதி கிறிஸ்டைன் தீயஸ் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், 'இவ்விருவருக்கும் குறைந்த விலையிலான தரம் குறைந்த மார்பக அழகு சிகிச்சைக்கான சிலிக்கன்களை பெற்றிருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். இவ்வார இறுதியில் அவர்கள் போட்டியிடவுள்ளனர். எதுவும் உடையாமல் இருக்கும் என நம்புவோம். அவசர தேவைக்கு அங்கு மருத்துவர்களும் இருப்பார்கள்' எனக் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .