2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தந்தையை கடத்திய குற்றச்சாட்டில் பெண் கைது

Super User   / 2012 மார்ச் 26 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உத்ரகாந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது தந்தையை கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முசூரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் என்பவரின்  விருப்பத்திற்கு முரணாக அவரின் மகள் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதேவருடம் ஏப்ரல் மாதம் அன்வர் காணாமல் போனார்.

இது தொடர்பாக அன்வரின் மகள் மற்றும் மருமகன் மீது சந்தேகம் கொண்ட அன்வரின் சகோதரர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார்.

இந்நிலையில் அன்வரின் மகள் இன்று திங்கட்கிழமை கைது  செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை இருவாரங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  அவரின் இரு குழந்தைகளை பராமரிக்க யாருமில்லாததால் குழந்தைகளும் மறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அன்வரின் மனைவி 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அன்வர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரன் மருமகன் தலைமறைவாகியுள்ளார் எனவும் அப்பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • pithamahan Tuesday, 27 March 2012 06:29 PM

    ithuthaan இந்தியா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .