2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சட்டத்தரணிகள் தொழிலை துறந்து, குழாய்திருத்துநராக மாறிய பெண்கள்

Kogilavani   / 2012 மார்ச் 16 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனைச் சேர்ந்த பெண் சட்டதரணிகள் இருவர், சட்டதரணிகள் தொழிலில் பாலின சமத்துவமில்லையென்று கூறி குழாய் திருத்தும் தொழிலை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஜெனட் வூட்  மற்றும் டெபோரா யாட்ஸ் என்ற இரு சட்டதரணிகளே இவ்வாறு குழாய் திருத்தும் தொழிலுக்கு மாறியுள்ளனர்.

மேற்படி இரு பெண்களும் வழக்குரைஞர்களாக பணியாற்றியவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.  ஆனால் இவ்விருவரும் குழாய் திருத்துநராக தமது தொழிலை மாற்றிக்கொண்டுள்ளனர்.

சட்டத்துறையில் ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதுக் குறித்து ஜெனட்(45) தெரிவிக்கையில், நான் நோட்டிங்ஹரில் குற்றவியல் வழக்குரைஞராக பணியாற்ற ஆரம்பித்தபோது பெண்கள் இத்தொழிலுக்கு  வருவது அரிதாக இருந்தது.

'இது உண்மையில் பால் சமத்துவமற்ற சூழலாகும். நான் சிறையில் இருக்கும் கட்சிக்காரர்களை சந்திக்க சென்றால் அவர்கள் என்னை பார்த்து 'எங்கே வழக்குரைஞர்?' என கேட்பர். பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவர்களை போன்றுதான்' என அவர் கூறினார்.

தற்போது, உலகமானது வேகமாக மாறிக்கொண்டு வருகின்றது. அதில் (சட்டத்துறையில்) பெண்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.

ஆனால் இப்போது என்னையும் டேபோராஹ்வையும் தவிர குழாய் திருத்துநராக பணியாற்றும் பெண்கள் யாரையும் இதுவரை காணவில்லை' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
'
நாங்கள் குழாய் திருத்துநர் தொழிலுக்காக முதன்முதலில் யோர்க்ஷயரில் உள்ள கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கியபோது, அவர்கள் 'இவை உங்களது ஆண்களுக்கானதா?' என கேட்டனர்.

ஆனால்  அதன்பின்னர் இப்படி நடக்கவில்லை. இந்த குழாய் திருத்துநர் தொழிழில் நாங்கள் பாலியல் ஏற்றத்தாழ்வுகளை பார்க்கவில்லை.  பெரும்பான்மையான குழாய் திருத்துநர்கள் எமக்கு மிகவும் உதவுபவர்களாக உள்ளனர்' எனவும் ஜெனட் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .