2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தாயும் மகளும் வீதியில் நிர்வாணமாக நடக்க நிர்ப்பந்திப்பு; மகளிர் தினத்தில் இந்தியாவில் சம்பவம்

Super User   / 2012 மார்ச் 11 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் தாயும் மகளுமான இருபெண்களை நிர்வாணமாக வீதியில் நடக்கச் செய்த 31 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பாரிதாபாத் மாவட்டத்தின் ராய்பூர் கலா கிராமத்தில் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

அக்கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர்சிங் என்பவர் பதின்மர் வயதான தனது மகளுக்கு மார்ச் 11 ஆம் திகதி திருமணம் செய்ய தீர்மானித்திருந்தார். இத்திருமணம் குறித்து கிராமத்தை சேர்ந்த சிலர் நீதிமன்றத்திற்கு ரகசிய தகவல் கொடுத்தால் நீதிமன்றம் தலையிட்டு இத்திருமணத்தை நிறுத்தியது.

நீதிமன்றுக்கு தனது அயல்வீட்டில் வசிக்கும் நபரே தகவல் கொடுத்தார்  என நம்பிய ஈஸ்வர் சிங், ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட மார்ச் 8 திகதி  ஆயுதமேந்திய 30 ஆண்களுடன் இணைந்து அயலவரின் வீட்டிற்குள் புகுந்து அந்நபரை தேடியுள்ளார். அந்நபர் அங்கு இல்லாததால் அவரின் தாயையும் சகோதரியையும்  ஈஸ்வர் சிங் தலைமையிலான குழுவினர் தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

'அக்குழுவினர் ஆயுதமுனையில் என்னையும் தாயையும் தொந்தரவு செய்தனர். ஆடைகளை களையவைத்து வீதிகளில் நடக்கவைத்தனர். அயலவர்கள் எவரும் எமக்கு உதவ வரவில்லை' என அப்பெணகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேற்படி ஈஸ்வர் மற்றும் அவரின் சகாக்கள்  மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும் அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டதால் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • manithan Monday, 12 March 2012 10:41 AM

    இந்தியாவில் இது சர்வ சாதாரணம்.

    Reply : 0       0

    riswan Tuesday, 13 March 2012 10:32 PM

    மானம் கெட்ட தேசம்.

    Reply : 0       0

    yasar Saturday, 02 June 2012 12:12 PM

    ithu oru manitha thanmaiyarravan seivathu.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .