2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நச்சுத்தன்மையான சிலிக்கன் பைகளை மார்பகத்திலிருந்து அகற்றுவதற்கு திணறும் கர்ப்பிணி

Kogilavani   / 2012 மார்ச் 05 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நச்சுத்தன்மையான சிலிக்கன் பைகளை பயன்படுத்தி மார்பக அழகுக்கான சத்திரசிகிச்சை செய்துகொண்ட ஜேர்மனிய பெண்ணொருவர் தற்போது கர்பமுற்றுள்ளதால் தனது மார்பில் பொருத்தப்பட்டுள்ள சிலிக்கனை அகற்றுமாறு மருத்துவர்களை கோரிவருகின்றார்.

மனுவேலா கெபர்ட் எனும் 29 வயதுடைய பெண், 2008 ஆம் ஆண்டு பி.ஐ.பி. எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சிலிக்கனை பயன்படுத்தி மார்பக சத்திர சிகிச்சையை செய்துள்ளார்.

தற்போது இவர் கர்ப்பமாகியுள்ளதால் தனது மார்பகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிலிக்கன் வெடித்து தனக்கும் தனது குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமென அவர் அச்சம் கொண்டுள்ளார்.

பி.ஐ.பி. நிறுவனம் கைத்தொழிற்துறைக்காக பயன்படுத்தப்படும் ஆபத்தான சிலிக்கன்களை பயன்படுத்தி மார்பக அழகு சிகிச்சைக்கான சிலிக்கன் பைகளை தயாரித்ததாக செய்தி வெளியான அதே வாரத்திலேயே இப்பெண் கர்ப்பமடைந்துள்ளமையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் இப்பெண் தனது மார்பகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிலிக்கனை அகற்றுவதற்கான மருத்துவ உதவிகளை ஊடகங்களின் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியுமென நம்பிக்கைக் கொண்டுள்ளார். இதனூடாக தனது குழந்தையையும் காப்பாற்றுவதற்கு முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

'தற்போது நான் எனது கனவு குழந்தை குறித்த ஆசைகளை வெளியிட்டுள்ளேன். எந்நேரமும் நான் குழந்தைக்கான பவ்டர், அல்லது ஆடைகளை காணும்போது கண்ணீர் விடுகிறேன்' என அவர் ஜேர்மன் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இவரது மார்பகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிலிக்கன் ஏற்கனவே உடலுக்குள் கசிய ஆரம்பித்துள்ளதாக ஸ்கான் பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

இவர் கர்ப்பிணியானதால் வயிறு பெரிதாகும்போது மார்பகத்திற்குள் உள்ள சிலிக்கான் பைகள் மேலும் அழுத்தங்களுக்குள்ளாகி வெடித்துவிடலாம் என கருதப்படுகிறது.

இப்பெண்ணின் மார்பகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிலிக்கான்களை அகற்றுவதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

உயர்குருதியமுக்கம் காரணமாக குருதி கட்டியாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் கருதுவதே காரணம். சிலிக்கன் கசிவு காரணமாக இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0

  • rahumathulla Tuesday, 06 March 2012 12:18 PM

    பாவம் இவருடைய நிலைமை. பரிதாபத்துக்குரிய பெண். இறைவனின் படைப்புக்கு எதிராகச் செயல்படும் மேல் நாட்டு மங்கையர்களுக்கு இவர் ஒரு பாடம். இவரையும் இவரது வாரிசையும் காப்பாற்றுவதற்கு டாக்டர்கள் முன்வர வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை!

    Reply : 0       0

    ram Tuesday, 06 March 2012 02:21 PM

    இவர்கள் அறிந்து செய்த ஆபாச நடவடிக்கை . யாரும் உதவி செய்ய கூடாது.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Wednesday, 07 March 2012 04:38 PM

    இது matduma வரும் இன்னமும் வரும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .