2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிறுவனை கொடூரமாக தாக்கிய நபர் நீண்டகால சிறைத்தண்டனையை எதிர்நோக்குகிறார்

Kogilavani   / 2012 மார்ச் 04 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர்  16 வயது சிறுவனை பற்கள் உடையும்வரை தாக்கிய காட்சி அடங்கிய வீடியோ யூரியூப் இணையத் தளத்தில்  வெளியாகிய நிலையல் அந்நபர் குறைந்த பட்சம் 10 வருடகால சிறைத்தண்டனையை அனுபவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச்  சேர்ந்த கெரி ஜோன்ஸன் என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு மேற்படி சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இவ்வீடீயோவானது கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில்  6 அடி 5 அங்குல உயரமும் 220 இறாத்தல் எடையும் கொண்ட மேற்படி நபர் தனது வீட்டு வளவில்  வைத்து அச்சிறுவனை  அடிப்பதும் பின்பு கீழே வீழ்த்தி அவனது முகத்தில் பல முறை குத்துவதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்நபருக்கு 57 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும்.  எனினும் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அவரின் வழக்குரைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேற்படி சிறுவனுடன் நடந்த குத்துச்சண்டை மோதலொன்றில் ஜோன்ஸனின் மகன் தோல்வியுற்றதையடுத்து ஜோன்ஸன் அச்சிறுவனுடன் மோதுவதற்கு ஆரம்பித்தாராம்.

ஜோன்ஸனை மோதலுக்கு தூண்டினாயா என ஜோன்ஸனின் வழக்குரைஞர் கேட்டபோது அச்சிறுவன் ஆம் என ஒப்புக்கொண்டான்.

தான் மைதானத்தில் வீழ்ந்தாகவும், பின்பு ஜோன்ஸனால்  தாக்கப்பட்டதாகவும் அதன்பின் எல்லாம் இருணடு போனதை தான் உணர்ந்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.

'இந்த தாக்குதலினால் எனது புருவம் பிளவுபட்டது, எனது பற்கள் பின்னால் தள்ளப்பட்டன. உதட்டின் உற்பகுதியும் கிழிக்கப்பட்டது. பற்கள் உதடு வழியாக வெளித்தெரிந்தது. தற்போதும் எனது முன் பற்கள் உணர்வின்றி காணப்படுகின்றன' என அச்சிறுவன் மேலும் தெரிவித்துள்ளான்.
 


You May Also Like

  Comments - 0

  • hameed Sunday, 04 March 2012 10:36 PM

    இப்படியானவரளுக்கு சரியான தண்டனை வழங்க வேண்ண்டும்

    Reply : 0       0

    ummpa Tuesday, 06 March 2012 08:05 PM

    டேவிட் இதனை பார்க்கவில்லையா? காட்டுமிராண்டிகள் இவர்கள். உலகமே பல பிரச்சினைக்கு காரணம் இவர்கள் நாட்டவர்களின் நடவடிக்கைதான்.

    Reply : 0       0

    clemend Wednesday, 07 March 2012 01:45 PM

    எல்லா நாட்டிலும் பைதியகரர்ஹல் இருக்கிரர்ஹல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .