Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 28 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிர்வாணக்கோலத்திலிருந்த பருமனான பெண்ணொருவர், காலைநேரத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த காரொன்றின் மீது ஏறி காரின் முன் கண்ணாடியை சேதமாகிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
25 வயதான ஜோன் நைட் எனும் இளைஞர் அவ்வேளையில் காரைசெலுத்திக்கொண்டிருந்தார். கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்ஸிகோ நகரிலுள்ள வீதியொன்றில் இடம்பெற்ற இச்சம்பவத்தை சிலர் படம்பிடித்துள்ளனர்.
ஹெவி செட் என குறிப்பிடப்படும் இப்பெண் பயணிகள் பலரை தாக்கியதால் வாகனமொன்றிலிருந்து இறக்கப்பட்டு பொலிஸாரினாலும் மருத்துவர்களினாலும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.
அவர் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையை திடீரென மருத்துவர்கள் மீது வீசியெறிந்த அப்பெண் வீதிக்குச்சென்று அங்கிருந்த காரொன்றின் மீது ஏறி முன் கண்ணாடியை உடைத்துள்ளார்.
மேற்படி காரின் சாரதியான ஜோன் நைட் இதுத் தொடர்பில் விபரிக்கையில்,
'அப்பெண் பெண் முற்றுமுழுதும் நிர்வாணக் கோலத்துடன் என்னை நோக்கி நடந்து வந்து எனது காரின் மேற்பகுதியில் ஏறினார். பின்னர் அவர் எனது காரின் கண்ணாடியை உடைக்க ஆரம்பித்தார்.
சிவில் உடையிலிருந்த பொலிஸார் வந்து அப்பெண்ணை காரின் கூரையிலிருந்து இறக்கி கைவிலங்கு அணிவிக்கும் வரை அப்பெண் அதிகமான தடவைகள் எனது காரின் கண்ணாடியை உடைத்த வண்ணம் இருந்தார்' எனத் தெரிவித்துள்ளார்.
காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு பெற காப்புறுதி நிறுவனத்துக்குச் சென்றபோது நான் கூறியதை அவர்கள் முதலில் நம்ப முடியாமல் இருந்தனர் என ஜோன் நைட் கூறினார்.
மேற்படி பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மனநோயாளியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
Kethis Thursday, 01 March 2012 12:53 AM
அந்த இளைஞர் நடுங்குகிறார்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
2 hours ago