2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

குழந்தைகளின் கால்களைப் பிடித்து சுழற்றி யோகா கற்பிக்கும் பெண்

Kogilavani   / 2012 பெப்ரவரி 27 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்யாவில் 'குழந்தை யோகா' என்ற பெயரில் வெளியாகியுள்ள திகிலூட்டும் புகைப்படங்கள் லட்சக் கணக்கானவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.   

இப்புகைப்படங்களில் தோன்றும் யோகா ஆசிரியை, பிறந்து இரண்டு வாரங்களேயான குழந்தையின் இரு கைகளை பிடித்து தனது தலைக்கு மேல் சுழற்றி எடுப்பது, கால்களை பிடித்து தலைகீழாக தொங்க விடுவது போன்ற பல காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

லேனா போகினா என்ற 51 வயதுடைய யோகா ஆசிரியையே இவ்வாறு குழந்தைகளுக்கான யோகா என்ற பெயரில் இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

இக்காட்சியை பார்த்த பலர் அப்பெண்ணின் கையில் இருப்பது வெறும் பொம்மை என்றே முதலில்  நம்பியுள்ளனர். ஆனால், மேற்படி யோகா ஆசிரியை இது உண்மையான குழந்தைகள் எனவும் தான் கடந்த 30 வருடங்களாக இவ்வாறு செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் எகிப்து போன்ற நாடுகளில் செயலமர்வுகளையும் நடத்தியுள்ளார். இதில் ஐரோப்பாவைச் சேர்ந்த பெற்றோர்கள் பலர் தமது சுமார் ஒரு மாத வயதான தமது குழந்தைகளையும் கட்டணம் செலுத்தி இவ்வாறான சுழற்றச் செய்துள்ளனராம். 

இக் 'கலை' ஆபிரிக்க பழங்குடி இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டது எனவும் பின்னர் ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர் சார்கோவ்ஸ்கியினால் மீள அபிவிருத்தி செய்யப்பட்டதாகவும் லேனா கூறுகிறார். 

குழந்தைகளுக்கான யோகாவை மேற்கொள்ளும் அத்தருணத்தில் அல்லது அதன் பிறகு அதிகமான குழந்தைகள் அச்சல் கண்ணீர் விடுவதும் அல்லது வாந்தி எடுப்பதுமான செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். ஆனால், இவை அக்குழந்தைகளின் நன்மைக்கானது என்று லேனா வலியுறுத்துகிறார்.

'இந்த யோகா கலையானது குழந்தைகளுக்கு மிகவும் நன்மையானது. இது ஆபத்தானது அல்ல. சில குழந்தைகள் இப்பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பிக்கும்போது அழுகின்றன. ஆனால், இதனை ஆரம்பிக்கும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றன. இதில் பங்குபற்றும் குழந்தைகள் நீச்சல், வாசிப்பு, பாடுதல், போன்றவற்றில் ஆரம்ப வயதிலேயே ஈடுபடத் தொடங்குகின்றன' என அவர் கூறியுள்ளார்.


 

 


You May Also Like

  Comments - 0

  • riswan Monday, 27 February 2012 10:51 PM

    கேவலமான நிலை ...

    Reply : 0       0

    ruthra Tuesday, 28 February 2012 01:30 AM

    இது உயிராபத்தை ஏற்படுத்தும் செயல். இவ்வாறான செயல்களை தவிர்த்துக்கொள்வது சிறந்தது. பின்பு கண்ணீர் சிந்துவதில் அர்த்தமில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .