2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஷொப்பிங் நிலையத்தின் பாரிய திரையில் திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானதால் அதிர்ச்சி

Kogilavani   / 2012 பெப்ரவரி 21 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்லோவாக்கியாவிலுள்ள கடைத்தொகுதியொன்றில் சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருள்  கடைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பாரிய தொடுதிரையொன்றில் திடீரென ஆபாசப்படங்களை ஒளிபரப்பாகியமையை  பார்த்து அங்கிருந்த  வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

பிராட்டிஸ்லாவா நகரிலுள்ள இக்கட்டிடத் தொகுதியில் தாம் செல்ல வேண்டிய இடத்தை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள உதவுவதற்காக இப்பாரிய தொடுதிரையானது பொருத்தப்பட்டிருந்தது. 

ஆனால் அதில் பல்வேறு வகையான தீவிர பாலியல் படங்கள் ஒளிபரப்பாகத் தொடங்கின.

மேற்படி  ஷொப்பிங் நிலையத்தின் அலுவலகர்கள் இது குறித்து கூறுகையில்,  கணினி ஊடுருவல்காரர்கள், தமது கணினி முறைக்குள் ஊடுருவி அதை  ஆபாசப்பட இணையத்தளமொன்றுடன் இணைத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

'இது எவ்வாறு நடந்தது என எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் நாம் அதை கண்டறிவோம் இச்சம்பவத்திற்காக எமது வாடிக்கையாளர்களிடம் நாம் மிகுந்த மன்னிப்புக்கோருகிறோம்' என அந்நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • செம்பகம் Thursday, 23 February 2012 02:45 PM

    இதல்லாம் சகஜமப்பா.போடுவதும் கேட்டா நாங்க, போடல்ல என்பதும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .