2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கைகளோ, கால்களோ இல்லாமல் சாதித்த இளைஞன் தேனிலவிலும் உற்சாகம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 19 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிறப்பிலேயே கைகள் மற்றும் கால்கள் இல்லாத நிக் வுஜிசிக் என்ற இளைஞர் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.  சிறுவயதில் இவர் மிக சிரமப்பட்டாலும் பின்னர் மற்றவர்களுக்கு அவர் பெரும் உந்துசக்தியாக மாறினார்.

அண்மையில் திருமணம் செய்த அவர் தற்போது  தேனிலவுக்காக சென்றுள்ளார். ஏனைய மேற்குலக தேனிலவுத் தம்பதிகளைப் போலவே நிக் வுஜிசிக்கும் அவரின் அழகிய மனைவியும் கடற்கரையில் உல்லாசமாக  மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

29 வயதான வுஜிசிக், தனது மனைவியை நீச்சலுடையுடன் வைத்து புகைப்படம் பிடித்த காட்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
டீட்ரா எமெலியா என்ற நோயினால் பாதிக்கப்பட்ட நிக் வுஜக், பிறக்கும்போதே கைகள் மற்றும் கால்களின்றி பிறந்தவர்.
ஆனால் இப்போது தனது இயலாமையை ஒரு பொருட்டாக எண்ணாமல் சாதாரண மனிதர்களால் செய்யக்கூடிய அனைத்தையும் தன்னாலும் செய்ய முடியும் என்பதை கண்காட்சிகளில் செய்துகாட்டுவது இவரின் நாளாந்த நடவடிக்கையாக  உள்ளது.

இவர் எழுதிய 'அவையங்கள் இல்லாமல் வாழ்தல்' எனும் புத்தகம் மிகப் பரபரப்பாக விற்பனையாகியுள்ளது. நிக், சாதாரண மக்களால் செய்யக்கூடிய எழுதுதல், தட்டெழுத்துதல்,  டிரம்ஸ் வாசிப்பு, பல்துலக்குதல் என அனைத்து வேலைகளையும் தானே செய்துகொள்வது குறிப்பிடத்தக்கது. 

நிக் வுஜக் தனது 17 ஆவது வயதில் தேவாலய குழுவொன்றுடன் இணைந்து தனது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டார். 2005 ஆம் ஆண்டில் அவருக்கு 'வருடத்தின் சிறந்த இளம் அவுஸ்திரேலியர்' என்ற விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பெப்ரவரி 10 ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கனே மியாஹரா எனும் பெண்ணை திருமணம் செய்தார். 
மேற்படி தம்பதியினர் தேனிலவுக்காக சென்றபோது வுஜக், தனது  மணைவியை கடற்கரையில் நீச்சல் உடையில் வைத்து புகைப்படம் பிடித்துள்ளார். அப்போது அவர் கழுத்தில் புகைப்படக் கருவியை வைத்து படம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி திருமண தம்பதியினருக்கு உலகமுழுதும் உள்ள ரசிகர்கள் பேஸ்புக் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர் 25 நாடுகளில் 30 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தகக்து.


You May Also Like

  Comments - 0

  • hal Sunday, 19 February 2012 11:13 PM

    தன்னம்பிக்கை தான் வாழ்கை உன்னால் முடியும் இந்தே உலகை வெல்ல ....

    Reply : 0       0

    makky Monday, 20 February 2012 04:29 AM

    இவருக்கு இறைவன் மறுமையில் சிறந்த பயனை கொடுப்பானாக.

    Reply : 0       0

    Kethis Monday, 20 February 2012 06:23 AM

    வாழ்க்கையில் விரக்தியுற்றிருந்த நிலையில், இந்த இளைஞனின் உரைகளை கேட்டு தன்னம்பிக்கை பெற்ற பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர்.

    Reply : 0       0

    aboo sulaim Monday, 20 February 2012 01:13 PM

    கை கால்கள் இருந்தும் ஊனமாக இருக்கும் நமது samookam இந்த அற்புத மனிதனைக் கண்டாவது thirunthumaa ?

    Reply : 0       0

    siriththiran Monday, 20 February 2012 07:37 PM

    தன்னம்பிக்கைக்கு இதை விட வேறு ஏதும் உதாரணம் தேவையில்லை ..நம்மில் எவ்வளவு பேர் திடகாத்திரமாக இருந்தும் எதையும் சாதிக்காமல் மனதளவில் ஊனமாக வாழ்கிறோம்.

    Reply : 0       0

    Mukthar Monday, 20 February 2012 09:17 PM

    கை கால் இருந்தும் மிருகம் போல் வாழும் மனிதர்கள் இருக்கையில் கை கல் இல்லாமல் சாதித்துக் கடிய இவர் சிறந்தவர்.

    Reply : 0       0

    s.michael Monday, 20 February 2012 09:54 PM

    மனதில் உறுதி

    Reply : 0       0

    jeni R Tuesday, 21 February 2012 12:11 AM

    முகத்தில் என்னவொரு அற்புத புன்னகை!

    Reply : 0       0

    Emthawfeek- Musali Tuesday, 21 February 2012 01:14 AM

    கல்யாண வாழ்க்கை நூறாண்டு.

    Reply : 0       0

    easternbrother Tuesday, 21 February 2012 02:55 AM

    WHAT A HANDSOME GUY .. BUT GOD, THE ALIMIGHTY TESTING HIS LIFE. .. HE IS GREAT EXAMPLE FOR US.......... I AM SO INSPIRED .............

    Reply : 0       0

    Ifham Tuesday, 21 February 2012 04:12 PM

    மாற்றம் வேனும் மனிதா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .