2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

முகத்தில் அகோரமாக வளரும் உரோமத்தினால் திண்டாடும் சகோதரிகள்

Kogilavani   / 2012 பெப்ரவரி 08 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில் புனே நகருக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் வசித்து வரும் உடன்பிறந்த சகோதரிகள் மூவர் அகோரமான உரோம வளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது உடல் முழுதும் அளவுக்கடந்த உரோமங்கள் வளர்ந்து இவர்களது அழகையே பாதிப்படையச் செய்துள்ளன.

சவீதா (வயது 23), மோனிஷா (வயது 18), சாவித்திரி சங்க்லி (வயது 16) ஆகிய சகோதரிகளின் தலை முதல் கால் வரை அடர்த்தியான உரோமங்கள் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றன. அவர்களது கண் இமை பகுதி, மூக்கு, மற்றும் முகம் ஆகியப் பாகங்களிலும் உரோமங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகின்றன. முகத்தில் வளர்ந்துள்ள உரோமங்கள் ஆண்களுக்கான தாடியை போன்று காணப்படுகின்றது.

இந்த அசுர வேக உரோம வளர்ச்சியானது அவர்களது தந்தையின் மரபணு மூலமான விளைவு எனத்  தெரிவிக்கப்படுகின்றது. இக்குடும்பத்தில் மொத்தம் 6 சகோதரிகள். இவர்களில் மூவருக்கே இப்பாதிப்பு உள்ளது.

இந்த உரோமங்கள் வளர்வதை தடுப்பதற்கு ஒருவகை கிரீம்களை இவர்கள் உபயோகித்தாலும் குறுகிய நாட்களுக்குள் உரோமங்கள் மீண்டும் வளர்ச்சியடைந்துவிடுவதாக இவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இவர்களின் தந்தைக்கும் இப்பாதிப்பு இருந்தது. இவர்களின் தாயாரான அனிதா அவரின் 12 ஆவது வயதில் திருணம் செய்ய நிர்ப்பந்திக்ப்பட்டாராம். திருமணம் நாள் வரை மணமகனை தான் பார்க்கவில்லை எனவும் அவருக்கு இப்பாதிப்பு இருந்தது  குறித்து தனக்குத் தெரியாது எனவும் அனிதா தெரிவித்துள்ளார்.

திருமணம் என்பது எமக்கு பொருத்தமான தேர்வல்ல. இது  நடப்பதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு தொடர்ந்து எமது உடலில் உரோமங்கள் வளர்ந்துகொண்டிருந்தால் யார் எம்மை திருமணம் செய்துகொள்வார்கள் என்று அச்சகோதரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

இது 100 கோடி பேரில் ஒருவருக்கு வரக்கூடிய நோய் எனவும் இதை குணப்படுத்துவதற்கு ஒருவருக்கு  மூன்றரை லட்சம் இந்திய ரூபா தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இப்பணத்தை திரட்டிக்கொள்வதற்கு தம்மால் முடியாது என இக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


 

 


You May Also Like

  Comments - 0

  • ala Saturday, 11 February 2012 10:59 PM

    இறைவனின் படைப்பில் இப்படியும் வினோதமான மனிதர்களா??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .