Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 07 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மது போதையில் நிர்வாண கோலத்துடன் பாலத்தின் உச்சியில் ஏறிய நபரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சென் மேயோ வயது 38 என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் வடகிழக்கு பகுதியான சேங்யாங் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வாகன சாரதிகளால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்படி நபரை மின் கம்பத்தில் இருந்து கீழே இறக்கியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கையில், 'அந்நபர் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வீடு திரும்பும்போது சுத்தமான காற்று வாங்கப்போவதாக இயற்கைகளை கண்டு மகிழவேண்டுமென்று கூறியுள்ளார். அதன்பின் அவர் தனது ஆடைகளை களைந்து விட்டு பாலத்தின் மீதிருந்த மின்கம்பத்தில் ஏறியுள்ளார்.
துரதிஷ்டவசமாக அவர் அளவுக்கதிமாக மது அருந்தவில்லை. அதனால் அவர் தனது சமநிலை தன்மையை பேணிக்கொண்டார். இல்லையென்றால் அவர் தனது எலும்புகளை உடைத்துக்கொண்டு இருப்பார்' என தெரிவித்துள்ளார்.
மேற்படி நபர் மது அருந்திவிட்டு அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும்;, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
32 minute ago
1 hours ago