Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பற்கள் இல்லாத பெண்ணொருவர் செயற்கை பற்களை வாங்குவதற்காக அமெரிக்க வங்கியொன்றில் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
49 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்துப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தின் வெயன்ஸ்பேர்க் நகரிலுள்ள மேற்படி வங்கியில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்புக் கமெராவில் அப்பெண் கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி பெண், அக்காட்சிகளில் பற்கள் இல்லாமல் தோன்றியுள்ளதாகவும் பற்களை பொருத்திக்கொள்வதற்காகவே அவர் இக்குற்றத்தை புரிந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இச்சிகிச்சைக்காக பல்வைத்தியருக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும் அடுத்த வருடம் வரை உதவித்திட்டங்கள் ஊடாக அப்பணத்தை பெற்றுக்கொள்ள முடியாதென்பதால் தான் இப்படி செயற்பட்டதாக அப்பெண் வாக்குமூலத்தில் தெரிவித்தாக வேயென்ஸ்பர்க் ரோந்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தரான டொம் அங்கிரோம் கூறினார்.
அவர் குறிப்பிட்ட பணத்தொகையொன்றை தருமாறு வங்கியிலுள்ள காசாளரிடம் குறிப்பொன்றை எழுதி நீட்டியுள்ளார். தான் துப்பாக்கி வைத்திப்பதாகவும் பொலிஸாருக்கு அழைப்பை ஏற்படுத்த வேண்டாமெனவும் அக்குறிப்பில் அவர் அச்சுறுத்தியிருந்தார்.
ஆனால் அந்த வங்கியில் தொழில்புரிந்த நபர் ஒருவர், குறித்த பெண் தேவாலயத்திற்கு வருபவர் என்பவதை அடையாளம் கண்டு அப்பெண்ணின் பெயரை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். பின்னர் அப்பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
2 hours ago