2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

புற்றுநோயை தவிர்ப்பதற்காக மார்பகங்கள், கர்ப்பப் பைகளை அகற்றும் சகோதரிகள்

Kogilavani   / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனைச் சேர்ந்த சகோதரிகள் மூவர் புற்றுநோய்க்குப் பயந்து  தமது மார்புகள் மற்றும் கர்ப்ப்ப பைகளை அகற்றுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

லுவான் மோர்டன் (வயது 38), கிம் ஜோன்ஸ் (வயது 33), ஜெம்மா டேன்னிஸ் (வயது 30) ஆகிய இச்சகோதரிகளின்  தாய் ரீட்டா 32 வயதான மார்பக புற்றுநோய் காரணமாக இறந்தார்.

அதையடுத்து இம்மூவரும் தமக்கும் புற்றுநோய் வரலாம் என்ற அச்சத்தில் தமது மார்பகங்களையும் கர்ப்பப் பைகளையும்  அகற்றிக்கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு கர்ப்பப் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் 50, 60 சதவீதம் இருப்பதாக வைத்தியர்கள் கூறியதைத் தொடர்ந்து மூத்த சகோதரிகள் இருவரும் கர்ப்பப்பையை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சகோதரிகளில் இளையவரான ஜெம்மா, தனது கணவனினூடாக குழந்தைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் கர்ப்பப்பையை அகற்றும் சகிச்சையை மேற்கொள்ளவாராம்.

இவர்களின் தாய் இறக்கும்போது மூத்தவரான லுவானுக்கு 12 வயது. ஏனைய இருவரும் 7 மற்றும் 4 வயதுடையவர்களாக இருந்தனர். ஏனைய பெண்களும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென இவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

'எமது தாய் இறந்ததன் பின்னர் நாங்கள் மூவரும் மிகவும் நெருக்கமாக வளர்ந்தோம். ஆனால் இந்த சத்திர சிகிச்சையானது எமது நெருக்கத்தை மேலும் அதிகரித்துள்ளது' என லுவான் மோர்டன் தெரிவித்துள்ளார்.

'நாம் அதிஷ்டசாலிகள். ஏனெனில் எமக்கு புற்றுநோய்க்கு காரணமான அந்த மரபணு உள்ளதென்பதை உணர்ந்து நாம் புற்றுநோய் விருத்தியாவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

ஆபத்தை குறைக்கக்கூடிய விடயங்கள் உள்ளன என்பதை மக்கள் உணரவேண்டும். எமது தாய் அந்த மரபணுவை கொண்டிருந்தார். எனினும் அவர் ஒருபோதும் சோதனை மேற்கொள்ளவில்லை' என அவர் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • Jeni Thursday, 02 February 2012 10:40 PM

    உங்கள் கணவர்மார்கள் சம்மதித்தார்களா?

    Reply : 0       0

    A.C.A.Najeem Friday, 03 February 2012 04:01 PM

    வெள்ளம் வரும்முன் தடுப்பு சுவர் கட்டிஉள்ளார்கள் ஆனாலும் கடவுளின் தீர்ப்பு இறுதியானது.

    Reply : 0       0

    shahusu Friday, 03 February 2012 07:30 PM

    கருப்பை, மார்பகம் மட்டும் தான் புற்றுநோயின் இலக்கேண்டு நெனச்சிட்டாங்க போல... நஜீம் சொல்றது மிகச் சரி.

    Reply : 0       0

    Mohamed FayasJeddah Saturday, 04 February 2012 11:32 PM

    இறைவனை நம்புங்கள் ......அவனே மேலானவன் ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .