2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பறந்துகொண்டிருந்த பின்லாந்து விமானத்தில் பொலிவூட் பாடலுக்கு ஊழியர்கள் நடனம்

Super User   / 2012 ஜனவரி 28 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பின்லாந்து நாட்டின் தேசிய விமான சேவையான பின்எயார் கடந்த வியாழக்கிழமை பறந்துகொண்டிருந்த தனது விமானமொன்றில் பொலிவூட் சினிமா  பாடல்களுக்கேற்ப ஊழியர்களை  நடனமாடச் செய்து பயணிகளை மகிழ்வித்துள்ளது.

இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி இத்திட்டத்தை மேற்கொண்டதாக பின்எயார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான ஊழியர்களில் பெரும்பாலானொர் இந்திய ஆடைகளை அணிந்த நிலையில் பொலிவூட் சினிமா பாடலுக்கு நடனமாடினர்.

பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியிலிருந்து இந்திய தலைநகர்புதுடில்லி நோக்கி பறந்துகொண்டிருந்த விமானத்திலேயே இந்நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.

விமான பணிப்பெண்ணான ஹெலினா கார்டீனென் என்பவரே இந்த யோசனையை முன்வைத்தாராம். மும்பையிலுள்ள முன்னாள் விமானப் பணிப்பெண்ணும் பொலிவூட் நடன ஆசிரியையுமான தனது நண்பியொருவரின் துணையுடன் இந்நடனத்திற்கான ஒத்திகைகளையும் அவர் நடத்தினார்.

இந்த விமான நடனக்காட்சி வீடியோ இணையத்தளங்களில் வெளியாகி 17 லட்சத்திற்கும் அதிமான தடவை பார்வையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .