2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இறைச்சித் துண்டில் 'அல்லாஹ்' என்ற சொற்பதம்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 26 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் விடுதியில் நேற்று புதன்கிழமை சமைக்கப்பட்ட இறைச்சிக் கறியில் இறைச்சித் துண்டொன்றில் 'அல்லாஹ்'  என்ற அரபுச் சொற்பதம் இருபக்கத்திலும் காணப்படுகிறது. அதனைப் படத்தில் காணலாம்.


You May Also Like

  Comments - 0

  • Muneer Sunday, 29 January 2012 01:57 PM

    இவை எல்லாம் அல்லாஹ்வின் அற்புதங்களாக நாம் அடுத்தவர்களுக்கு காட்டி, அல்லாஹ்வின் மகிமையையும், அபார ஆற்றலையும் குறைத்து எடை போடக்கூடாது. அவனது சக்திக்கு அளவே இல்லை. எம் கண் முன்னால் தெரியக்கூடிய அத்தனையும் அவன் வழங்கிய அற்புதம் தான்....... நான், மற்றும் நீ உட்பட. சாதாரண இந்த விடயம் ஒரு தற்காலிக நிகழ்வாக இருக்கலாம். அப்படியே அவனின் அற்புதங்களில் ஒன்றை காட்டவேண்டுமானால்,, அவனே சொன்ன அல்குரான் மிக பெரிய ஒரு அற்புதமாகும்........

    Reply : 0       0

    masooth Saturday, 02 June 2012 04:48 PM

    ஆம் இதனை அரிவிதவர் எதனை நாடுகிரார் ? ஆம் இது ஒரு ஆராய்ச்சி என்டிருந்தால் (மாஷா அல்லாஹ்) மேலும் நான் அவருக்கு உபதேசிப்பது இதை விடவும் மேலரன ஆராய்ச்சயான குர் ஆன் , ஹதீதுகலையும் ஆராய்ந்து தாமும் நல்லுபதேசம் பெற்று மற்றவர்கலுக்கும் இஸ்லாமிய புனிதமான உதேசத்தை எற்றி வைக்கட்டுமாக! (ஆமீன் ) அதுதான் வெற்றியின் பாதையாகும்.

    Reply : 0       0

    Nizam Salih Friday, 10 February 2012 05:18 AM

    மனிதனைப் பற்றி சிந்தியுங்கள். அதுவே நல்ல மனிதனுக்கு போதும்.

    Reply : 0       0

    yusry Wednesday, 01 February 2012 03:40 AM

    மாசாஹ் அல்லாஹ்

    Reply : 0       0

    shan Tuesday, 31 January 2012 08:54 AM

    ஒவ்வொரு மனிதனையும் கருவிலே உருவாக்கியது முதல் அவனை வெளிகொணர்ந்து இந்த மண்ணிலே வாழவைக்கும் அந்த இறைவனின் அனைத்தும் அற்புதம் தான், இதைவிட என்ன வேண்டும் ???

    Reply : 0       0

    nawas Monday, 30 January 2012 11:31 PM

    அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் உள்ளது அதிசயமா? இதுவல்ல அதிசயம் இதோ கீழே உள்ளதுதான் அதிசயம்!


    இலவசமாக காற்று நமக்கு கிடைக்கிறதே இது அதிசயம்!

    தாயைப் பார்த்து குழந்தை சிரிக்கிறதே இது அதிசயம்!

    துபாயில் இருந்துக்கொண்டு மனைவியிடம் செல்போனில் பேசுகிறீர்களே இது அதிசயம்!

    வானத்தில் பயணிக்கிறீர்களே இது அதிசயம்!


    எழுதுகோல் உதவியின்றி டைப் செய்கிறீர்களே இது அதிசயம்!


    அல்லாஹ் நிகழ்த்தும் அதிசயங்களை எழுத்தால் கூற இயலாது அந்த அளவுக்கு எல்லாமே அதிசயம்தான்! எனவே அல்லாஹ்வை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்துங்கள்! பொய்களையும் தவறான வதந்திகளையும் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!



    தக்காளி, மசூதியின் பறக்கும் மேற்கூரை ஆகியவற்றை பார்த்துத்தான் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும் எனில் இது இறைநம்பிக்கையல்ல! குர்ஆனை பார்த்து, படித்துத்தான் ஒருவன் இறைநம்பிக்கையை முறையாக வளர்த்துக்கொள்ள இயலும் ஏனெனில் அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்! இதை நபிகளார் (ஸல்) அவர்களின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்!

    Reply : 0       0

    faiq Monday, 30 January 2012 07:15 PM

    இது பெரிய விடயம் அல்ல..இதற்கு மேல் எத்தனை ஆயிரம் அல்லாஹ்வின் அதிசயங்கள் நடந்துள்ளன!!நடக்க உள்ளன!!

    Reply : 0       0

    mafas Monday, 30 January 2012 03:56 AM

    அல்லா ஒருவன் ... அவன்தான் எல்லாவற்றையும் படைத்தவன் ....

    Reply : 0       0

    Abdul Haleem Sunday, 29 January 2012 08:45 PM

    இதெல்லாம் ஒரு தற்செயலான ஒரு நிகழ்வாகும். இவற்றைக்கூறித் திரிவது இஸ்லாத்தை மற்ற மதங்களை போல் மூட நம்பிக்கைகளுக்குள் தள்ளும் ஒரு செயலாகும். இஸ்லாம் மார்க்கம் இவ்வாறான மூட நம்பிக்கைகளிலிருந்து மிகத் தூய்மையானது.

    Reply : 0       0

    Ullam Thursday, 26 January 2012 09:11 PM

    இவற்றை விளம்பரபடுத்தி அல்லாஹ்வின் வல்லமையினை குறைத்துவிடதீர்கள்.. அல்லாஹ்வின் வல்லமை இவை அனைத்தையும்விட மேலானது.. இந்த விரிந்த உலகை பாருங்கள் இவை அனைத்தும் அவனின் வல்லமையே...

    Reply : 0       0

    roshan Friday, 27 January 2012 10:35 PM

    இப்படிப்பட்ட முட்டாள்தனமான விடயங்களை காட்டி இஸ்லாத்தைக் கேவலப்படுத்தாதீர்கள். இஸ்லாம் ஒரு விஞ்ஞானபூர்வமான சமயம். இயற்கையைப் பார்த்தாலே அல்லாஹ்வின் மகிமை புரியும். எமது சமூகம் இஸ்லாத்துக்கு சம்மந்தம் இல்லாத விடயங்களை பார்த்து பாதை தவறி போகின்றது.

    Reply : 0       0

    risahd Friday, 27 January 2012 05:37 PM

    அஸ்ஸலாமு அழைக்கும் ஏன் அல்லாஹ்வின் அற்புதம் மற்ற சகோதரர்கள் பார்க்கக்கூடாதா?

    Reply : 0       0

    saboordeen Friday, 27 January 2012 04:37 PM

    விளங்காத ஜென்மங்களுக்கு இந்த உலஹமே புதிர் தான்.முதல்ல வாழ்க்கை என்னும் பாடத்தை படியுங்க.அப்போ உண்மை puriyum

    Reply : 0       0

    Ajifa Friday, 27 January 2012 03:01 PM

    அற்புதத்தை காட்டித்தான் மக்களை தன்னை விசுவாசம் கொள்ள வைக்க அல்லாஹ்வுக்கு எவ்வித தேவையுமில்லை. ஆனால் படைத்தவனை மறந்து வாழ்பவர்களுக்கு தான் இருப்பதை உணர்த்திக்கொண்டிருகின்றான் அடிக்கடி.

    Reply : 0       0

    naleem Friday, 27 January 2012 06:24 AM

    சகோதரரே இறைச்சி துண்டிலயோ இல்லை கிழங்கை வெட்ட அதனுள்ள உள்ள எழுத்தை வைத்து அற்புதம் செய்துதான் அல்லாஹ் தன்னை நிருபிக்க தேவையில்லை. நாங்கள் முஸ்லிம்கள் இவைகளை upload பண்ணுவதால் அன்நிய மக்கள் இஸ்லாத்தை தவராக புரிந்துகொள்ள வழிவகுக்கும். இந்த மாதரி அற்புதத்தை காட்டித்தான் மக்களை தன்னை விசுவாசம் கொள்ள வைக்க அல்லாஹ்வுக்கு எவ்வித தேவையுமில்லை.

    Reply : 0       0

    PUTTALAM MANITHAN Friday, 27 January 2012 01:51 AM

    ஏன் உள்ளம் அல்லாஹ்வின் மகிமையை மற்ற எல்லோருக்கும் தெரியபடுத்தக்கூடாதா?

    Reply : 0       0

    Ossan Salam - Doha Friday, 27 January 2012 12:12 AM

    இது போன்றவையெல்லாம் வெறும் தேவையற்ற கண்டுபிடிப்புகள் இதனை விட அல்லாஹ்வின் ஆணைகளை ஒழுங்குற பின்பற்றி வருவதே உண்மை மு'மீன்களுக்கு அழகாகும்...... இது போன்ற சில்லறை விளம்பரங்கள் இஸ்லாத்தின் பார்வையில் எந்த பெறுமானமும் அற்றவை. அல்லாஹ்வே சகலவற்றையும் படைத்திருக்கும்போது அவன் பெயர் அவனது படைப்புகளில் பொறிக்கப்படவேண்டிய தேவையில்லை. இது புகைப்படம் எடுத்தவரின் குழந்தைத் தனமான செயலாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .