Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Super User / 2012 ஜனவரி 16 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது கணவர் தனக்கு போதைமருந்து கொடுத்துவிட்டு, தன்னை ஆபாச வீடியோ படமெடுத்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் மகளிர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனக்கு 10 பவுண் தங்க நகையும் ஒரு லட்சம் ரூபா பணமும் வழங்காவிட்டால் இப்படங்களை இணையத்தில் தரவேற்றம் செய்யப்போவதாக கணவர் மிரட்டியதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
இம்முறைப்பாட்டின்படி, தமிழகத்தின் ஊட்டியை சேர்ந்த 20 வயதான இப்பெண், பெங்களூரைச் சேர்ந்த மொஹமட் பயாஸ் (25) என்பவரை 2010 டிசெம்பர் 5 ஆம் திகதி திருமணம் செய்திருந்தார். அப்பெண்ணின் பெற்றோர் 7 பவுண் தங்க நகையும் ஒரு லட்சம் ரூபா பணமும் சீதனமாக வழங்கியிருந்தனர். அதன்பின் இத்தம்பதி பெங்களூரில் வசிக்கச் சென்றனர்.
எனினும் தொழில் எதுவுமற்ற பயாஸ், தங்க நகைகளை விற்றுள்ளார். அண்மையில் நோயுற்ற மேற்படி பெண், தலைவலி ஏற்பட்டதாக கூறியபோது அவரின் கணவர் இரு குளிசைகளை கொடுத்துள்ளார்.
அக்குளிசைகளை உட்கொண்டபின் அப்பெண் உணர்விழந்தார். அதன்பின் அப்பெண்ணை அவரின் கணவர் வீடியோ படமெடுத்துள்ளார்.
கணவரின் நண்பர்களுடன் உடலுறவு கொள்ளுமாறு அதற்குமறுத்தால் வீடியோவை இணையத்தில் தரவேற்றம் செய்யப்போவதாக கணவர் மிரட்டியதாகவும் எனினும் தான் அதற்கு இணங்கவில்லை எனவும் அப்பெண் கூறியுள்ளார். தனது கணவர் வெளியே செல்லும் வேளைகளில் தன்னை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
இறுதியில் அவ்வீட்டிலிருந்து தப்பி, நேரு நகரிலுள்ள தனது வீட்டிற்கு தான் சென்றதாக அப்பெண தெரிவித்துள்ளார். அங்கு வந்த தனது கணவர் 10 பவுண் நகையும் ஒரு லட்சம் ரூபா பணமும் கோரியதாகவும் இல்லாவிட்டால் மேற்படி வீடியோவை இணையத்தில் வெளியிடப்போவதாகவும் மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து ராமநாதரபுரம் பொலிஸ் நிலையத்தில் அப்பெண் முறைப்பாடுசெய்தார். இது தொடர்பாக அப்பொலிஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் முனீரா பேகம் கூறுகையில், 'பயாஸை கைது செய்வதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு பெங்களூருக்கு சென்றுள்ளது. இந்திய குற்றவியல் கோவையின் 498, 406, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது' என்றார்.
manithan Tuesday, 17 January 2012 12:38 PM
கட்டிய மனைவிக்கு எப்படியெல்லாம் துரோகம் செய்கிறான் அந்தக் கேடு கெட்டவன்!
Reply : 0 0
Rajisvaran Tuesday, 17 January 2012 06:12 PM
சீதனக் கொடுமை இந்தளவுக்கு சென்றுவிட்டதா?
Reply : 0 0
pithamahan Tuesday, 17 January 2012 06:51 PM
ithuthaan india
Reply : 0 0
suman Tuesday, 17 January 2012 11:05 PM
இவனுக்கு மனவியே தேவையில்லை.
Reply : 0 0
lankan Wednesday, 18 January 2012 01:42 PM
இவங்க எல்லாம் உலகத்துக்கு தேவை இல்லை.
Reply : 0 0
Hussain. Friday, 20 January 2012 12:15 PM
மிருகம் மனித ரூபத்தில்
Reply : 0 0
sutha Monday, 23 January 2012 01:43 AM
இவனுகள் எல்லாம் மனிதப் பெறவி இல்ல
Reply : 0 0
Rahumathulla Monday, 23 January 2012 05:10 PM
இவனை போன்ற ஈனப்பிறவிகள் உலகில் இருக்க கூடாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
2 hours ago