Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 12 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸில் நகரொன்றில் திருமண வைபவத்தின்போது உள்ளாடையின்றி தேவலாயத்திற்கு வரும் மணமகள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு உள்ளூராட்சி உறுப்பினர் ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார். இதற்கு தடை விதிப்பதற்காக புதிய சட்டமொன்றை இயற்றும் யோசனையையும் அவர் முன்வைத்துள்ளார்.
பிரேஸில் தென் கிழக்கு நகரமான விலா வெல்ஹா நகரில் மேற்படி மணமகள்களின் எண்ணிக்கை மிக அதிகரித்துள்ளதாக ஒஸியாஸ் ஸிஸி எனும் மேற்படி உறுப்பினர் கூறியுள்ளார்.
திருமணம் செய்துக்கொள்ளும் போது உள்ளாடை (நிக்கர்) இன்றி தேவலாயத்திற்கு வந்தால் தமது திருமண வாழ்க்கை நீடிப்பதாக மேற்படி மணமகள்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் இதனால் திருமணம் செய்துக்கொள்ளும் பெண்கள் இவ்வழக்கத்தை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர் எனவும் அவர் கூறுகிறார்.
எனவே இனிவரும் காலங்களில் திருமணம் செய்து கொள்வதற்காக தேவலாயத்திற்கு வரும் மணமகள்கள் உள்ளாடை அணிந்து வருவது கட்டயமாக்கும் வகையிலான சட்டம் இயற்றும் யோசனையை பிரேஸிலின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மேற்படி உறுப்பினர் ஒஸியாஸ் ஸிஸி முன்வைத்துள்ளார்.
'உள்ளாடை அணியாமல் திருமண வைபவத்தில் கலந்துகொண்டால், தமது திருமண வாழ்க்கை நீடிக்கும் என பெரும் எண்ணிக்கையான பெண்கள் நம்புகின்றனர்.
எவரும் அவர்கள் விருப்பபடி திருமணத்தை செய்துக்கொள்ளாலாம். ஆனால் அவர்கள் திருமணம் செய்துக்கொள்வதற்காக உள்நுழையும் புனித வணக்கஸ்தலங்களுக்கு கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும். மற்றும் உள்ளாடைகளின்றி வருவது மதிப்பளிப்பதாகாது' என ஒஸியாஸ் ஸிஸி கூறியுள்ளார்.
தான் முன்வைத்துள்ள சட்டமூல யோசனையின்படி, மணமகளின் மேலாடையின் கழுத்துப் பகுதி எந்தளவு தாழ்வாக இருக்கலாம் என்பதையும் வரையறை செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் திருமண வைபவத்தை நடத்தும் பாதிரியார்கள் சங்கடத்திற்குள்ளாவதிலிருந்து தவிர்க்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.
'மணமகளின் ஆடை குறித்து சோதிப்பது கடினம்தான். எனினும் அறிவுறுத்தல் பிரசாரங்களை நடத்துவதன் மூலம் புனிதத் தலங்களின் புனிதத்தை பேண முடியும்' என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மேற்படி நகரில் திருமணம் செய்துவைக்கும் உள்ளூர் மதகுரு ஒருவர் இந்த யோசனை அபத்தமாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.
'மணமகள் உள்ளாடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிவதற்கு பொலிஸாரை வரவழைப்பது அபத்தமானது என எண்ணுகிறேன்' என இனோச் டி காஸ்ட்ரோ எனும் பாதிரியார் தெரிவித்துள்ளார்.
செம்பகம் Friday, 13 January 2012 03:16 PM
இதத்தான்யா இஸ்லாம் மார்க்கம் சொல்லுது ஹிஜாப் அணியச் சொல்லி. இனியாவது உலக நாடுகளில் ஹிஜாப் அணியும் சட்டத்தை தளர்த்துவார்களோ?
Reply : 0 0
emarat Friday, 13 January 2012 03:36 PM
சீரழிஞ்ச சமுதாயம்...........
Reply : 0 0
Mussamil Friday, 13 January 2012 05:43 PM
உலகம் ரொம்ப படு கேவலமாக போகுது.
Reply : 0 0
fath Saturday, 14 January 2012 04:08 AM
கீழாடை இல்லை என்று சிறுநீர் கழிக்காமல் பார்த்துக் கொள்ளவும் . சீரழிவுக்கு ஒரு எல்லை இல்லை . மெழுகுவர்த்தி அணைவதற்கு முன்னாள் பிரகாசமாக எரியும். இந்த நிலைதான் இப்போது எல்லா மேற்கு உலகுக்கும் . மிக விரைவாக எல்லாம் அழிந்து விடும் .wait
Reply : 0 0
Sdeen Saturday, 14 January 2012 04:31 AM
காட்சட்டை இல்லாமல் ரயிலில் பயணம் உள்ளாடை இல்லாமல் திருமணம் nirwaanamakavum ethum nadakkalaam தானே.
Reply : 0 0
faheem Saturday, 14 January 2012 07:12 PM
இந்தப் பிரச்சினை வரக் கூடாது என்பதர்காகத்தான் இஸ்லாம் மார்க்கம் சொல்லுது பெண்கள் ஹிஜாப் அணியுங்கள் என்று. இனியாவது
புரிந்து கொள்ளுங்கள். இதை நீங்கள் இன்னமும் புரிந்து கொள்ளாவிட்டால் இது போன்ற சம்பவங்களை இனியும் நடக்கும். பார்க்கத்தான் போகிறீர்கள்.
Reply : 0 0
asker Monday, 16 January 2012 02:53 PM
இஸ்லாம் என்ன கூறுவதை விட்டு கிறிஸ்தவம் என்ன கூறுகிறது என்று பாப்போம் .......
Al-Qur'an 24:30
Mathew 5:27-28
(ii)
Al-Qur'an 24:31
(iii)
Six Criteria for Hijab in Islam
Deuteronomy 22:5
I Timothy 2:9 e.g. of Mary
I Corinthians 11:5-6
மதங்களை சரியானமுறையில் பின்பற்றவேண்டும்
Reply : 0 0
fjj Tuesday, 17 January 2012 03:10 AM
இதன் பிறகு தான் பிரச்சினேயே வரப்போகுது. சட்டம் வந்ததும் உள்ளாடை அணிந்துள்ளாரா இல்லையா என்று புனிதஸ்தலத்தில் உள்ளவர்கள் ஆர்வத்தோடு பார்க்கப் போறாங்கோ.
Reply : 0 0
Ajifa Tuesday, 17 January 2012 02:16 PM
உடையை குறைப்பது பேஷன் என்றது மேற்குலகம் அதுவே இப்போது தலையிடியாகி விட்டது போலும்..... பாவம்.
Reply : 0 0
arivu Tuesday, 17 January 2012 05:45 PM
மன மகன் உள்ளாடை test ????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
2 hours ago