Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 31 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணையத்தளத்தில் 'செக்ஸ்' குறித்து அதிகம் தேடுதலை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன.
கூகுள் இணையத்தளத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான தரவுகளின்படி, செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது.
இந்தியா இரண்டாமிடத்திலும் வியட்நாம் மூன்றாமிடத்திலும் எகிப்து நான்காமிடத்திலும் இந்தோனேஷியா ஐந்தாமிடத்திலும் உள்ளதாக 'கூகுள் ட்ரென்ட்ஸ்' தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
இதேவேளை செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட 10 நகரங்களில் 8 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானின் லாகூரும் வியட்நாமின் ஹனோயும் முதல் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவை சாராத நகரங்களாகும்.
இவ்வருடத்தில் மாத்திரமல்லாது கூகுள் தேடல் தளத்தில் இதுவரைக்காலமும் அதிக செக்ஸ் தேடலை மேற்கொண்டோர் உள்ள நாடுகளின் பட்டியலும் பாகிஸ்தான் தான் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தியாவை 3 ஆம் இடத்திற்கு தள்ளிவிட்டு வியட்நாம் இரண்டாமிடத்தில் உள்ளது.
'20 மில்லியன் இணைத்தள பாவனையாளர்களைக் கொண்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், சகல வருடங்களுக்குமான உலகளாவிய 'செக்ஸ் தேடல் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது' என பாகிஸ்தானின் த எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை பெப்ரவரி, ஆகஸ்ட் மாதம் தவிர்ந்த ஏனைய சகல மாதங்களிலும், செக்ஸ் என்ற வார்த்தையை தேடியவர்களை அதிகம் கொண்ட உலகின் முதல் 10 நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களுக்கான பட்டியலில் எந்தவொரு பாகிஸ்தான் நகரமும் இடம்பெறவில்லை என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வருடத்தில் செக்ஸ் என்ற வார்த்தையை தேடியவர்களை அதிகம் கொண்ட நகரங்களின் பட்டியலில் உலகளவில் இந்தியாவின் லக்னோ முதலிடத்தையும் கொல்கத்தா இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன. சென்னை உலகளவில் 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
கூகுள் ட்ரென்ட்ஸ் தரவுகளின்படி, 2011 ஆம் ஆண்டில் செக்ஸ் என்ற வார்த்தையை தேடியவர்களை அதிகம் கொண்ட நாடுகள் நகரங்கள் மற்றும் செக்ஸ் என்ற வார்த்தை அதிகம் தேடப்பட்ட மொழிகள் பட்டியலின் விபரம் பின்வருமாறு:
ilham Sunday, 01 January 2012 10:52 AM
நல்ல சாதனைதான் வாழ்த்துக்கள்
Reply : 0 0
janoovar Sunday, 01 January 2012 03:16 PM
அரபு நாடுகளில் வசித்தவர்களுக்கு தெரியும் பாகிஸ்தானியர்கள் எந்த அளவு பிரபல்யமானவர்கள் பாலியல் விசயத்தில் என்று.. அரபு நாட்டு பத்திரிகையை புரட்டிப் பாருங்கள். நன்றாக விளங்கும் சரியான கணக்கெடுப்பு.
Reply : 0 0
sham Sunday, 01 January 2012 07:29 PM
இஸ் திஸ் த்ரு ரிப்போர்ட் ?
Reply : 0 0
mihwar Sunday, 01 January 2012 10:21 PM
இது நம்பும் படியாக இல்லை.முஸ்லிம்களை இப்படியும் பழி வாங்கப் பார்கிறார்கள்.
Reply : 0 0
Kethis Sunday, 01 January 2012 11:02 PM
அப்படியானால் இந்தியர்கள், வியட்நாமியர்களையும் பழிவாங்கப் பார்க்கிறார்களோ?
Reply : 0 0
Ullam Monday, 02 January 2012 02:35 AM
இதில் டிரிக்ஸ் என்னவென்றால்... இவர்கள் "SEX" என்ற சொல்லை மாத்திரம் வைத்து கணிப்பிட்டிருக்கிரார்கள், இது தொடர்பான அனைத்து சொற்களையும் வைத்து கணிப்பார்களாயின் இவர்களது நாட்டவர்கள் முன்னனி வகிப்பார்கள். இது வெளிப்படை உண்மை. என்றாலும் பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் பெயரடுப்பதில் கெட்டிக்காரர்கள்....!!!!
Reply : 0 0
suthan Monday, 02 January 2012 02:40 PM
பாகிஸ்தான் நாட்டிலுள்ள பத்திரிகையும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது .....இதிலென்ன சதி இருக்க போகிறது....பாகிஸ்தான் மக்களும் மனிதர்கள் தானே .....எல்லா மனிதர்களை போலவும் உணர்ச்சி ...ஆசை .....வேகம் ....உள்ளவர்கள் ...இதிலென்ன தவறு கண்டு விட்டோம் ......இந்தியா , வியட்னாம் .....துருக்கி .....அல்ஜிரியா... மலேசியா ...இந்தோனசியா ....மொரோக்கோ .....போலந்து .....எல்லாரும் அனுபவிக்கட்ட்டும் .....மாந்தர்களை அவர்களாகவே பார்க்க வேணும் ....
Reply : 0 0
jibran Thursday, 05 January 2012 02:11 PM
நவீன உலகின் புதிய தேடல்களாக இருக்கலாம். இது ஒன்றும் புதினமில்லையே !!!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago