2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இலங்கையரின் காதை கடித்து துண்டாக்கியதாக பிரித்தானியர் மீது புகார்

Super User   / 2011 டிசெம்பர் 27 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்து இலங்கையர் ஒருவரின் காதை பிரித்தானிய பிரஜையொருவர் கடித்து துண்டாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பிரித்தானிய பிரஜை  கோட்டை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுபோவிலயைச் சேர்ந்த ஒருவரே மைக் டைசன் பாணியிலான இந்நடவடிக்கை குறித்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். கொழும்பிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்தொன்றின்போது மேற்படி பிரித்தானிய பிரஜைதனது காதை கடித்து துண்டாக்கியதாக அவர் கூறியுள்ளார்.

இத்தாக்குதல் நடைபெற்றபோது வெளிநாட்டுப் பெண்ணொருவர் தம்முடன் நடனமாடிக்கொண்டிருந்ததாகவும் அவர்கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAAR Wednesday, 28 December 2011 04:12 AM

    குடி வெறி போய் கொலை வெறியில் கடித்து இருப்பார்?

    Reply : 0       0

    natheer sheriff Wednesday, 28 December 2011 07:04 PM

    Why this கடி வெறி .. கடி வெறி .. கடி வெறி .. டா .

    Reply : 0       0

    UMMPA Wednesday, 28 December 2011 10:09 PM

    நீங்கள் கொலை செய்யலாம். அவர் ஏன் காதை கடிக்கக்கூடதா!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .