2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

குதிஉயர்ந்த பாதணிகளை ஆண்களும் அணியுமாறு கோரி சமவுரிமைப் போராட்டம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 13 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உக்ரைனில்,  பெண்களைபோன்று  உயரமான குதிகால் பாதணிகளை நாள் முழுதும் அணிந்திருக்குமாறு ஆண்களை ஆண் - பெண் சமஉரிமை பிரசாரகர்கள் வலியுறுத்தியுள்ளனர். உக்ரைனில் பெண்களின் நிலையை ஆண்கள் உணர்ந்துகொள்ளச் செய்வதற்காக இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனின் கீவ் நகரிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில்  இச்செயற்பாட்டாளர்கள்  ஆர்பாட்டமொன்றையும்  நடத்தினர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவார காலமாக நடைபெறும் போராட்டத்தின் ஒருபகுதியாக இந்நிகழ்வு நடைபெற்றதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு தழுவிய ரீதியில் வருடாந்தம் 1000 பெண்கள் அவர்களது துணைவர்களால் கொலை செய்யப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 17 மற்றும் 21 வயதிற்குட்பட்ட பெண்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பாலியல் ரீதியாக தாக்கப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு தொலைக்காட்சி நட்சத்திரமான ஒல்யா போல்யாக்கோவா இது குறித்து தெரிவிக்கையில், 'இறுதியாக ஆண்கள் இன்று குதிஉயர்ந்த பாதணி அணிவது எப்படியிருக்கும் என்பதை உணர்ந்திருப்பார்கள்' என்றார்.


 


You May Also Like

  Comments - 0

  • neethan Wednesday, 14 December 2011 02:54 AM

    உக்ரைன் காரிகைகளே ஆண்களை குதி உயர் காலணிகளை அணிய செய்வதன் நோக்கம், உங்களின் நிலையை புரிய வைப்பதானது ஆண்களை இம்சை செய்வதாக அமையாதா? குதி உயர் காலணிகளை அணிய ஆண்கள் வற்புறுத்தினார்களா?

    Reply : 0       0

    ala Friday, 16 December 2011 04:01 AM

    ஆண்களின் ஆடைகளில் ஒன்று விடாமல் அணியும் பெண்கள் இன்னும் என்னவெல்லாம் சொல்லுவார்களோ? விட்டால் உங்களின் ஆடைகளை எல்லாம் நாங்கள் அணிகிறோம் நீங்களும் அதுபோல அணியுங்கள் என்பார்கள் போல உள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .