Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 12 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைப்பழம், வெள்ளரிக்காய் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை பெண்கள் தொடவோ பார்க்கவோ கூடாது என மதகுரு ஒருவர் கூறியுள்ளதாக எகிப்திய இணையத்தளமொன்று செய்திவெளியிட்டுள்ளது. இத்தகைய பழங்கள், காய்கறிகளின் தோற்றமானது பெண்களிடம் பாலியல் சிந்தனைகளை ஏற்படுத்தும் என்பதே இதற்கு காரணமாம்.
ஐரோப்பாவை தளமாகக் கொண்ட பெயர் குறிப்பிடப்படாத மேற்படி மதகுரு இவ்வாறு கூறியதாக பிக்யா மாஸ்ர் எனும் எகிப்திய செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இத்தகைய பழங்களும் காய்கறிகளும் ஆண்களின் அங்கங்களைப் போன்றிருப்பதாகவும் ஆணுறுப்பைப் போன்று காணப்படுவதாகவும் இவை பெண்களுக்கு பாலியல் ரீதியிலான சிந்தனையை தூண்டிவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கரட் மற்றும் சீமை சுரைக்காய் போன்றவற்றையும் பெண்களுக்கான இத்தடைப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
பெண்கள் இவற்றை வாங்குவதிலிருந்து எவ்வாறு தடுப்பது என இவ்விடயம் தொடர்பில் ஒருவர் குறித்த மத குருவிடம் கேள்வியெழுப்பியபோது, அதற்கு அவர், இவ்விடயமானது அவர்களுக்கும் கடவுளுக்கும் இடையேயானது' என பதிலளித்துள்ளார்.
குடும்பத்திலுள்ள இந்த உணவுகளை பெண்கள் உண்ண விரும்பினால் என்ன செய்வது என கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், இவ்வுணகளை பெண்கள் பார்வைக்குப் படாத இடத்தில் குடும்பத்திலுள்ள ஆண்கள் துண்டுதுண்டுகளாக வெட்டி பெண்களுக்கு உண்ணக்கொடுக்கலாம்' எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் எந்த மதத்திலும் இவ்வாறான நிபந்தனைகள் இல்லையெனவும் இவர் பிரபல்யமடைவதற்காக இப்படி கூறுகிறார் எனவும் பலர் விமர்சித்துள்ளனர்.
ummpa Tuesday, 13 December 2011 02:15 PM
Dilan, அவருக்கு இல்லாத கோபம்தான்.
Reply : 0 0
priya Monday, 19 December 2011 04:09 PM
விவஸ்தை கெட்ட பைத்தியகாரன்தான் இந்த மடகுரு.
Reply : 0 0
Khan Monday, 19 December 2011 05:55 AM
எந்த மத மட மதகுரு?
Reply : 0 0
fahad. Saturday, 17 December 2011 09:02 PM
அப்படியானால் விரல்களை என்ன பண்ணுவது?
Reply : 0 0
rex Thursday, 15 December 2011 05:06 PM
பெண்கள் பார்த்ததை தெரியாமல் சாப்பிட்டு விட்டாரோ?
Reply : 0 0
PUTTALA MANITHAN Thursday, 15 December 2011 12:00 AM
இவருக்கு அது,,,,,,,,,, கிடைக்க வில்லை போலும்
Reply : 0 0
winter Wednesday, 14 December 2011 04:18 PM
பாலியல் உணர்வு ஒன்றும் கேவலமானது இல்லையே.. மனிதனுக்கு அவசியமான ஒன்று தானே..
இவருக்கு ஏன் இந்த கொலை வெறி??
Reply : 0 0
pithamahan Tuesday, 13 December 2011 06:03 PM
முட்டாள்
Reply : 0 0
saf Tuesday, 13 December 2011 05:56 PM
முட்டாள் மதகுரு. இவர் ஒரு மன நோயாளி .
Reply : 0 0
lankan Tuesday, 13 December 2011 02:46 PM
அவர் மதகுரு இல்லை மடகுரு
Reply : 0 0
neethan Monday, 12 December 2011 10:16 PM
பிரபல்யம் அடைய மதகுரு பயன்படுத்தும் யுக்தி, பிரபலமாகுமா, அல்லது புத்தி பேதலித்த நிலைமியினாலான அறிக்கை என்றாகுமா? எதுவானாலும் பிரபலமாகும்.
Reply : 0 0
joice Tuesday, 13 December 2011 06:57 AM
அப்படின்னா பலாபழத்தை ஆண்கள் தொடவே கூடாதே.
Reply : 0 0
Dilan Tuesday, 13 December 2011 06:27 AM
வாழைப்பழத்தின் மீது அப்படி அவருக்கு என்ன கோபமோ?
Reply : 0 0
drhasbullahilmy Tuesday, 13 December 2011 06:04 AM
மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காத இப்படியான செய்திகளை போட்டு உங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ளுங்கள். நன்றி.
Reply : 0 0
easternbrother Tuesday, 13 December 2011 04:10 AM
முதல்ல இந்த மதகுருவை இந்த வாழப்பழத்தை திங்க வேண்டாம் என சட்டம் போடணும்........
Reply : 0 0
JG Stephan Tuesday, 13 December 2011 02:48 AM
பைத்தியக்காரன் .. முட்டாள் தனமான சிந்தனை .. கைல கிடச்சா .....
Reply : 0 0
PUTTALA MANITHAN Tuesday, 13 December 2011 01:26 AM
யாருங்கோ அந்த மத குரு?
Reply : 0 0
Ramya Tuesday, 13 December 2011 01:15 AM
இப்படி தீர்ப்புக்கூறும் இவர் போன்றேவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டு செக்ஸ் சாமியார் வரிசையில் உள்ளடக்கப்பட வேண்டும். மார்க்க அறிவு இல்லாத முட்டாள்.
Reply : 0 0
Ullam Tuesday, 13 December 2011 12:56 AM
ஒருவரும் அலட்டிக்கொள்ள வேண்டாம்., எது நல்லது எது கூடாது என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காரணங்களுடன் படைத்தவனால் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. புதிதாக ஒன்றையும் சேர்க்கவோ, விளக்கவோ தேவையும் இல்லை, அதிகாரமும் இல்லை. இது ஒரு இருபக்க விளம்பரம்...
Reply : 0 0
zain naseem Monday, 12 December 2011 11:19 PM
மதகுருவிற்கு புத்தி பேதலித்து விட்டது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
4 hours ago