2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அழகுசிசிச்சை செய்ய முயன்று அவலட்சணமான பெண்

Kogilavani   / 2011 டிசெம்பர் 06 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒளிச்சிகிச்சையினூடாக  மிருதுவான சருமத்தை பெறமுடியும் என்று கூறப்பட்டதை நம்பி, தனது  மார்பில் அந்த ஒளிச்சிகிச்சையை மேற்கொள்ள முயன்ற பெண்ணொருவர் அதிகமான சூட்டுக்காயங்களுக்கு உள்ளான சம்பவமொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.

கெரோலட் கிரிப்ஸ் என்ற பெண்ணே இவ்வாறான நிலையை எதிர்நோக்கியுள்ளார்.    40 வயதான மேற்படி பெண்ணுக்கு அவரின் நண்பி ஒருவர் இச்சிகிச்சையை சிபாரிசு செய்துள்ளார். 

அதன்பின் தனியார் அழகு சிகிச்சை நிலையமொன்றுக்குச் சென்று இச்சிகிச்சையை செய்தபோது, தனது உடலில் துன்புறுத்துகின்ற வலியை அவர் உணர்ந்துள்ளார்.

அழகு சிகிச்சை நிலையத்தில் தொழில்புரிந்த நபர்,  ஒளிபாய்ச்சும் இயந்திரத்தை தனது மார்பிற்கு மேலாக வைத்தபோது கடும் வலியை உணர ஆரம்பித்ததாக கிறிப்ஸ் கூறியுள்ளார்.

"நான் அழகு சிகிச்சைளை மேற்கொண்டுவிட்டு மேற்படி நிலையத்திலிருந்து 20 நிமிடத்தில் வீட்டிற்கு சென்றுவிட்டேன். வீட்டில் சென்று பார்க்கும்போது நான் பயந்து போனேன்.

என்னுடைய மார்புகளில் சிவப்பு நிற தழும்புகள் அதிகமாக காணப்பட்டன. அது பார்ப்பதற்கு மிருகங்களுக்கு அடையாளக்குறி இடப்பட்டதைப்  போன்று காணப்பட்டது.

என்னால் எனது உடலிற்கு எந்த ஆடையையும் அணிய முடியாமல் இருந்தது. ஏனெனில் மிகவும் வலியை கொடுத்தது"  என அவர் தெரிவித்துள்ளார்.

கலைத்துறை எழுத்தாளரான மேற்படி பெண்ணுக்கு தற்போது  நஷ்ட ஈடு வழங்கப்பட்டு வருகின்றது.

"சில வகை அழகுச் சிகிச்சைகள் மருத்துவரின் கண்காணிப்பிலேயே மேற்கொள்ள இடமளிக்கும் வகையில் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என நான் எண்ணுகிறேன்" என கூறியுள்ளார்.


 


You May Also Like

  Comments - 0

  • flower Wednesday, 07 December 2011 04:17 AM

    நல்லதொரு படிப்பினை ....

    Reply : 0       0

    PUTTALA MANITHAN Wednesday, 07 December 2011 09:41 AM

    ஆ...ஆஆ...நல்ல ஒரு அழகு சுப்பர் .

    Reply : 0       0

    Sabri Wednesday, 07 December 2011 04:15 PM

    இருப்பதை விட பறப்பதற்கு ஆசை பட்டால் இது தான் நடக்கும்.

    Reply : 0       0

    FARHAN Wednesday, 07 December 2011 07:22 PM

    கிடச்சத கொண்டு திருப்தி காண வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான்.

    Reply : 0       0

    s.ameen Tuesday, 13 December 2011 03:34 AM

    அழகு செய்ய வேறு இடம் இல்லையா ?

    Reply : 0       0

    irshancool Wednesday, 14 December 2011 02:53 PM

    பெண்களுக்கு இது நல்ல படிப்பினை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .