Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 05 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடுப்புக்கு மேல் ஆடை அணியாமல் ஊழியர்கள் பணியாற்றும் சிகையலங்கார நிலையமொன்றை இங்கிலாந்தில் திறப்பதற்கான திட்டம் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது.
நோர்விச் நகரில் இரவு களியாட்ட விடுதிகளை அதிகமாக கொண்ட பகுதியில் த கியுப் பார் என்ற பெயரில் இச் சிகையலங்கார நிலையம் ஆரம்பிக்கப்படுவதற்கு அனுமதி கோரி பெண்ணொருவர் விண்ணப்பித்துள்ளர்.
இந்த சிகையலங்கார நிலையம் பகல்நேரத்தில் டொப்லெஸ் ஊழியர்கள் பணியாற்றும் சிகையலங்கார நிலையமாக இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேஸ் புக் மூலமும் எதிர்ப்புப் பிரசாரங்கள் ஆரம்பமாகியுள்ளன.
குறித்த சிகையலங்கார நிலையத்தினால் அப்பகுதிக்கு தீங்கை ஏற்படுத்தலாமென்றும் மற்றும் அந்நிலையத்தில் தொழில் புரிபவர்கள் பல ஆபத்தை எதிர்நோக்க நேரிடலாமென்றும் அப்பிரதேசத்திலுள்ளவர்கள் கவலை கொண்டுள்ளனர்.
இச்சிகையலங்கார நிலையத்தில் தொழில்புரியவிருப்பவர்கள் ஆண்களா பெண்களா என்பது தெரிவிக்கப்பபடவில்லை.
இந்த நிலையத்தை திறப்பதற்காக நகர சபையின் அனுமதியை பெறும்வரை தான் கருத்து வெளியிடப்போவதில்லை என இதன் உரிமையாளர் ரெபேக்கா பேர்ட் தெரிவித்துள்ளார்.
'கியூபிற்கு' அண்மையில் உள்ள கெரி தொம்ஸன் இதுக் குறித்து தெரிவிக்கையில், 'இது முற்றிலும் பரிகசிக்கத்தக்க திட்டமாகும் நான் எண்ணுகிறேன். இது குறித்து இப்பகுதியிலுள்ள சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைத் தொழில் துறையுனருடன் பேசியுள்ளேன். ஒவ்வொருவரும் இந்தத் திட்டம் பரிகசிக்கத்தக்க திட்டமென்று கூறியுள்ளதுடன் இத்திட்டம் முன்னோக்கி செல்லாது என்றும் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்' என்றார்.
இது ஓர் தந்திரோபாய திட்டமென்று நான் நினைக்கிறேன். நிர்வாணத்துக்கும் சிகையலங்காரத்திற்கும் தொடர்பு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை' என அவர் கூறியுள்ளார்.
Rahumathulla Tuesday, 06 December 2011 01:01 PM
இது ரொம்ப ரொம்ப நல்ல திட்டமா இருக்கே! ஹி !...ஹி.!!... ஹீ !!!
Reply : 0 0
nakeeb Wednesday, 07 December 2011 02:05 PM
கணவன் மட்டும் காணும் அழகே
கடைகள் போட்டு காட்டுறியே
உண்மையான பாலியல்
சுவை தெரியாமல் போகுதே
Reply : 0 0
jameel Thursday, 08 December 2011 05:13 AM
இதை டிபாரண்ட யோசீச்சா நல்லா இருக்குமே { ஒன்னும் இல்லாம ....
Reply : 0 0
jameel Thursday, 08 December 2011 05:14 AM
இதை டிபாரண்ட யோசிச்சா நல்லா இருக்குமே { ஒன்னும் இல்லமே இருந்தால் } ஹி ஹி ஹி .............
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago