2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பெற்றோராக போகும் தம்பதி தாம் சகோதரன் சகோதரி என்றறிந்து அதிர்ச்சி

Kogilavani   / 2011 நவம்பர் 04 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட காதல் ஜோடியொன்று உண்மையில் சகோதரனும் சகோதரியும் என திருமணத்திற்கு சற்றுமுன்னர் அவர்களின் பெற்றோர்களால் தெரியப்படுத்தப்பட்ட சம்பவமொன்று தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் அடுத்த மாதம் குழந்தையும் பெறவுள்ளார். இந்நிலையில் தனது குழந்தைக்கு தனது சகோதரனே தந்தை என்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேற்படி இளைஞனும் யுவதியும்  குழந்தை பருவத்திலேயே பெற்றோர்களால் பிரிக்கப்பட்டுள்ளனர்.  இவ்விருவரும் அவர்களது பெற்றோர் விவாகரத்து செய்யும்போதே பிரிக்கப்பட்டு தனித்தனியாக வளர்ந்ததாக தென்னாபிரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் அதன்பின் பல்கலைக்கழகத்தில் கற்கும்போதே சந்தித்துள்ளனர். அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பாக தம்மை பெற்றோருக்கு அறிமுகம் செய்துகொள்ள எண்ணினர்.

ஆனால் கடந்த வாரம் இக்குடும்பவத்தவர்கள் சந்தித்தபோதே இருவரும் சகோததர்கள் என்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
மேற்படி யுவதி 8 மாத குழந்தையாக இருக்கும்போதும், ஆண் 2 வயது சிறுவனாக இருக்கும்போது பிரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞனின் தந்தை இது தொடர்பில் தெரிவிக்கையில், தனது மனைவி தன்னை ஏமாற்றியதற்காக கடந்த 1983 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதாக தெரிவித்துள்ளார். பெண் குழந்தை அவரது மனைவியிடமும் ஆண் குழந்தை தன்னிடமும் வளர்ந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த இளைஞனும் யுவதியும்; கடந்த 2007 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சந்தித்து காதலில் வீழ்ந்துள்ளனர்.
திருமண ஆயத்தம் இடம்பெறும்வரை  கடந்த 5 வருட கால காதல் வாழ்வின் ஒருதடவையேனும் அவர்களின் குடும்பங்கள்  சந்தித்துகொண்டதில்லை.

ஆபிரிக்க பாரம்பரியத்தின்படி, திருமணம் செய்யும் ஆண் மணப்பெண்ணுக்கு 'லபோலா' எனும் நிதி (சீதனம், மஹர் போன்றது) வழங்க வேண்டும். இதற்காக மணமக்களின் குடும்பத்தவர்களுக்கிடையிலான சந்திப்பு நடைபெறுவது வழக்கம்.

ஆனால் மேற்படி இளைஞனும் யுவதியும் தமது குடும்பத்தினரை சந்திக்கச் செய்தபோது அவர்களின் வாழ்வில் மறக்கமுடியாத பேரிடியான தகவல் கிடைத்தது.

இத்தகவலினால் தான் பெரும் அதிர்ச்சியடைந்திருப்பதாக மேற்படி யுவதி தெரிவித்துள்ளார்.

'அது கண்டவுடன் ஏற்பட்ட காதல். நாம் காதலில் விழுந்தபின் திரும்பிப் பார்க்கவேயில்லை. நாம் குடும்பமாகி, முடிந்தவரை குழந்தைகளை பெற வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. இப்போது எமக்கு குழந்தை கிடைக்கப்போகிறது. அது வளர்ந்தவுடன் நாம் என்ன சொல்லப்போகிறோம் என்பது தெரியவில்லை' என அந்த யுவதி கூறியுள்ளார்.

மேற்படி அதிர்ச்சிகரமான தகவலையடுத்து தாம் இருவரும் பிரிந்துவிடத் தீர்மானித்துள்ளதாகவும் இந்த அதிர்ச்சியை விவாகரத்து செய்த தமது பெற்றோருடன் எப்படி கையாள்வது எனத் தெரியவில்லை எனவும் மேற்படி இளைஞன் தெரிவித்துள்ளான்.


You May Also Like

  Comments - 0

  • KLM Saturday, 05 November 2011 01:24 AM

    பயங்கர சோதனைதான்

    Reply : 0       0

    3roses Saturday, 05 November 2011 01:26 AM

    இங்கு குற்றம் சொல்ல வேண்டியது இவர்களை அல்ல. இவர்களது பெற்றோரை....

    Reply : 0       0

    mk Saturday, 05 November 2011 01:28 AM

    இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.

    Reply : 0       0

    Hot water Saturday, 05 November 2011 01:28 AM

    காதலர்களே முடிந்தவரை உங்கள் காதலின் ஆரம்பத்திலேயே பெற்றோருக்கும் அறிவித்துவிடுங்கள்.

    Reply : 0       0

    ala Saturday, 05 November 2011 02:04 AM

    இதற்கு தான் பெற்றோர்களின் சம்மதத்தை பெறுங்கள் காதலிக்கும்முன்னே. பெற்றோர்களின் தவறால் இன்று பிள்ளைகளுக்கு தான் பிரச்சனை.

    Reply : 0       0

    rahumathulla Saturday, 05 November 2011 02:28 AM

    கண்டதும் காதல் கொள்ளும் இளைஞர், யுவதிகளுக்கு இவர்களின் துயரக்கதை ஒரு பாடமாக அமையட்டும்! காதலர்களே இனிமேல் காதலிக்க முன்பு ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

    Reply : 0       0

    UMMPA Saturday, 05 November 2011 06:38 PM

    திருமணத்துக்கு முன் பிள்ளை இதுக்குதான் சொல்லுவது நல்ல மதத்தை தெரிவு பண்ணி அதன்படி நடவுங்கள். எந்த மதம் திருமணத்துக்கு முன் உறவுகொள்ள சொல்லியது ? மானிடா மிருகங்களை மிஞ்சிவிட்டீர்கள் .

    Reply : 0       0

    MM.Rasmeer Sunday, 06 November 2011 07:06 AM

    என்னச் சொல்லி உண்ணச் சொல்லி குற்றமில்லை. kaalam செய்தகோலமடி பெற்றோர் செய்த paavamadi.

    Reply : 0       0

    alkan Tuesday, 08 November 2011 09:39 PM

    மதங்கள்(படைத்தவன்) எதை எல்லாம் பாவம் என்று தடுத்துள்ளதோ அவைகளை தவிர்ப்பதே மனிதனுக்கு நல்லது. மீறியதன் விளைவுக்கு இது ஒரு உதாரணம் மாத்திரமே.

    Reply : 0       0

    safa Tuesday, 08 November 2011 11:40 PM

    காதலே பொய்யடா வெறும் காற்றடைத்த பைய்யடா....
    so, காதல்... nothing

    Reply : 0       0

    rusan Thursday, 10 November 2011 12:27 AM

    இவர்கள் இரண்டு பெரும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன ?

    Reply : 0       0

    rusan Thursday, 10 November 2011 12:27 AM

    இவர்கள் இரண்டு பெரும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன ?

    Reply : 0       0

    Arunan Thursday, 10 November 2011 02:04 PM

    எதிர்காலம் kaarthirukirathu un kulanthaiyudan, mudinthathai vittu nadakapovathai enni santhosamaha iru...

    Reply : 0       0

    chelvin Friday, 11 November 2011 12:10 PM

    எல்லோரும் வெட்கி தலை குனியவைக்கும் காதல் விளையாட்டு சீர்கெட்ட உலக சமூகம்.

    Reply : 0       0

    supa Sunday, 13 November 2011 03:58 AM

    இலங்கையிலும் நடக்கலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .